Share on Social Media

குவாத்தமாலா சிட்டி: உலக கோப்பை வில்வித்தை ஆண்கள் , பெண்கள் ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ், தீபிகா குமாரி தங்கம் வென்றனர்.

மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா சிட்டி நகரில் உலக கோப்பை வில்வித்தை போட்டி நடந்தது.  பெண்கள் அணிகளுக்கான ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, அன்கிதா, கோமலிகா கூட்டணி , மெக்சிகோவை வீழ்த்தி தங்கம் வென்றது.

உலக கோப்பை ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியா வென்ற 5வது தங்கம் (2011, 2013ல் 2 முறை, 2014, 2021) இது.  இவை அனைத்திலும் தீபிகா குமாரி இடம் பெற்றிருந்தார். 

தனிநபரில் கலக்கல்

பெண்களுக்கான தனிநபர் ‘ரிகர்வ்’ பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, அரையிறுதியில் அலெசாண்ட்ரோவை (மெக்சிகோ) வென்றார். பைனலில் அமெரிக்காவின் மெக்கென்சியை ‘ஷூட் ஆப்’ முறையில் வீழ்த்தி, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

ஆண்களுக்கான தனிநபர் ‘ரிகர்வ்’ பிரிவில் தீபிகா குமாரியின் கணவர், இந்தியாவின் அடானு தாஸ், அரையிறுதியில் அல்வார்டோவை (மெக்சிகோ) வென்றார். பைனலில் ஸ்பெயினின் காஸ்ட்ரோவை 6–4 என வென்ற அடானு தாஸ், தங்கம் கைப்பற்றினார். 

‘ரீகர்வ்’ பிரிவு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ், அன்கிதா ஜோடி, அமெரிக்க ஜோடியை 6–2 என வென்று, வெண்கலம் வென்றது. உலக கோப்பை தொடரில் இந்தியா 3 தங்கம், 1 வெண்கலம் என முதன் முறையாக 4 பதக்கங்கள் வென்றது. 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *