Share on Social Media


கோவை:மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் குறைந்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும், பண்டிகைக்குப் பின் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க, சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் இடம் இல்லாமல், பலரும் அவதிப்பட்டனர். இதையடுத்து சுகாதார துறை சார்பில், பள்ளிகள், கல்லுாரிகளிலும் 100 – 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டன.ஏராளமான நோயாளிகள், இம்மையங்களில் சிகிச்சை பெற்று மீண்டனர். தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இதற்கிடையே பண்டிகை நாட்கள் துவங்கி விட்டன. பொருட்கள் வாங்க மக்கள் அதிக கூட்டமாக திரண்டு வருவதாலும், விடுமுறையை கொண்டாட பஸ்களில் வெளியூருக்கு பாதுகாப்பில்லாமல் பயணம் செய்வதாலும், தீபாவளிக்குப்பிறகு தொற்று மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் பரவி உள்ளது.ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ”தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. ”இருப்பினும், திடீரென பாதிப்பு அதிகரித்தால், அதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா சிகிச்சை மையங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.”கல்லுாரிகளில், செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையங்களை கலைத்து, அப்பகுதிகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை,” என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *