Share on Social Media

வார்சா: போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் தீபக் புனியா விலகினார்.

போலந்தில், சர்வதேச ‘ரேங்கிங் சீரிஸ்’ மல்யுத்த போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் தீபக் புனியா (86 கி.கி.,), ரவி தஹியா (57 கி.கி.,), வினேஷ் போகத் (53 கி.கி.,), அன்ஷு மாலிக் (57 கி.கி.,) என நான்கு பேர் பங்கேற்க சென்றிருந்தனர்.

சமீபத்தில் பயிற்சியின் போது தீபக் புனியாவின் இடது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் போலந்து ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இவர், காலிறுதியில் அமெரிக்காவின் ஜாஹித் வாலன்சியாவை சந்திக்க இருந்தார்.

இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு துணை செயலாளர் வினோத் தோமர் கூறுகையில், ‘‘ஆம், காயம் காரணமாக தீபக் புனியா பங்கேற்கவில்லை. இருப்பினும் இவர், வரும் ஜூலை 5 வரை போலந்தில் இருப்பார். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் தேவையில்லாமல் ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டோம். தவிர போட்டியில் பங்கேற்க யாருக்கும் நெருக்கடி தர விரும்பவில்லை,’’ என்றார்.

 

 

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *