Share on Social Media


அண்மையில், இந்து மதம் குறித்து இழிவாகப் பேசியதாக கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், பாதிரியார் கைது விவகாரத்தின் பின்னணி குறித்துப் பேசுவோர், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மத ரீதியான சர்ச்சைகளை சிலர் திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள்’ என குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.காந்தியிடம் பேசினோம்….

”தேவாலயம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் திட்டமிட்டு நடத்திய போராட்டத்தின் பின்னணியிலேயே பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டதாக சொல்கிறார்களே?”

ஜார்ஜ் பொன்னையா

ஜார்ஜ் பொன்னையா

”எங்களுடைய கன்னியாகுமரி மாவட்டத்தில், மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, ஒரு மத வழிபாட்டுத் தலம் அருகே, மற்றொரு மத வழிபாட்டுத் தலம் கட்டப்படக்கூடாது என்று வேணுகோபால் கமிஷன் அறிக்கை சொல்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடுதான் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், அருமனை அருகேயுள்ள மாத்தூர் பகுதியில், இந்து கோயில்களுக்கு அருகே, அரசு அனுமதி இன்றி, சிலர் தேவாலயம் கட்ட முற்பட்டனர்.

இதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், ‘இங்கே சர்ச் கட்டினால், எங்கள் வழிபாட்டுக்கு அது குந்தகம் விளைவிக்கும். திருவிழா சமயங்களில் நாங்கள் மைக் செட் வைப்பதற்குக்கூட இடைஞ்சலாக இருக்கும்’ என்றெல்லாம்கூறி போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அனுமதியோடு, அவர்கள் சர்ச் கட்டுவார்களேயேனால், நாங்கள் யாரும் அங்கே போராடப்போவதில்லையே!

இன்னும் 25 வருடங்கள் கழித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்துக்கள் இருப்பார்களா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது! ‘இங்கேயும் இந்துக்கள் வாழ்ந்தார்கள்’ என்றெல்லாம் சரித்திரத்தில்தான் படிக்கவேண்டி வருமோ என்னவோ!”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *