Share on Social Media


அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் உள்ள மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு வீட்டுக்குச் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, குருவின் தாயாரிடம் ஆசிபெற்ற உதயநிதி, குருவின் மகன் கனலரசனிடம் பேசிவிட்டு தேர்தல் பிரசாரத்துக்காகப் புறப்பட்டுச் சென்றார். காடுவெட்டி குருவின் படத்துக்கு உதயநிதி மரியாதை செலுத்தியதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

குருவின் தாயாரிடம் ஆசிபெற்றபோது...

குருவின் தாயாரிடம் ஆசிபெற்றபோது…

“வன்னியர் சமூகத்துக்கும், காடுவெட்டி குருவுக்கும் தி.மு.க செய்த இன்னல்களையும், கொடுமைகளையும் பா.ம.க-வும் வன்னியர் சமூகமும் ஒருபோதும் மறக்காது’’ என்று பா.ம.க தரப்பில் கொந்தளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பா.ம.க தலைமையின் ஒப்புதலுடன் நம்மிடம் பேசிய அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு, “மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குரு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டதும், அவர் மீது அதிகமான வழக்குகள் பதியப்பட்டதும் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *