Share on Social Media


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘தேசியத் தலைவர்’. ‘ஊமை விழிகள்’ அரவிந்தராஜ் இயக்க, கதாநாயகனாக ஜெ.எம்.பஷீர் என்பவர் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்க, பாரதிராஜா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் ஹீரோ பஷீர் கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் சிறுபான்மையினர் அணியில் பொறுப்பிலிருந்தவர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுக் கூட கரம்பை மணல் அள்ளும் கான்ட்ராக்ட் இவருக்குக் கிடைத்தது.

J.M.பஷீர்

இந்தச் சூழலில் தற்போது தி.மு.க.வில் இணைந்திருக்கிறார் பஷீர். ‘நாளைய பாரதப் பிரதமர்’ என உதயநிதியைப் புகழ்ந்து விளம்பரங்கள் கொடுத்து வருகிறார்.

பஷீர் கட்சி மாறிய பின்னணி குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தால், ‘அதை ஏன் கேக்கறீங்க, பெரிய காமெடி’ என்கிறார்கள்.

என்ன அந்த காமெடி?

‘தேசியத் தலைவர்’ படத் தயாரிப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரெம்பவே நெருக்கமானவர். அ.தி.மு.க ஆட்சி இருந்தவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

காட்சி மாறி ஆட்சி மாறியதும் பஷீர் தி.மு.க.வுலயும் சிலர்கிட்ட தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி மணல் கான்ட்ராக்ட்லாம் எடுத்தார். அப்பவே அவர் மீது அ.தி.மு.க தலைமைக்கு அதிருப்தி உண்டாகத் தொடங்கிடுச்சு. ஒருகட்டத்துல ‘எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க-வுல இருந்து நீக்கணும்’ எனப் பேட்டியெல்லாம் கொடுக்கத் தொடங்கிய பஷீரை கட்சியை விட்டே நீக்கியது அ.தி.மு.க தலைமை.

Desiya Thalaivar 2 Tamil News Spot
‘தேசியத் தலைவர்’ பஷீர்

பிறகு சில மாதங்களுக்கு முன்னாடி திடீர்னு சசிகலா அ.தி.மு.க-வைக் கைப்பற்ற நினைச்சுக் காய் நகர்த்தினப்ப, பஷீர் பார்வை அவங்க பக்கம் திரும்பிச்சு.

கடந்த அக்டோபர் மாதம், தேவர் ஜெயந்தி அன்னைக்கு திடீர்னு போய் சசிகலாவைச் சந்திச்சு அவங்களுக்கு ஆதரவைத் தெரிவிச்சுட்டார் பஷீர்.

இதனால கடுப்பான படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, “நமக்கு ஆகாதவங்க பக்கம் போனா எப்படி? அந்தாளை தி.மு.க. பக்கமாவது போய்த் தொலையச் சொல்லுங்கய்யா! இல்லாட்டி படம் வெளிவர்றதுல ஏதாச்சும் சிக்கல் வரலாம்” என எச்சரித்திருக்கிறார்கள்.

பட வெளியீட்டில் சிக்கல் வரலாம் என்கிற தகவலைக் கேட்ட பிறகுதான் பஷீர் உஷாராகி மன்னார்குடியிலிருந்து கோபாலபுரத்துக்குக் கிளம்பினாராம். அரசியல்ல இதெல்லாம்… சாதாரணம்ப்பா!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.