Share on Social Media


தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும். இல்லையெனில் உயர்கல்வித் துறைக்கு மட்டுமல்ல; மதுரைக்கும், காமராஜருக்கும் அவப்பெயர் ஏற்படும்.

உண்மை தான்; சத்தமாக சொல்லாதீங்க… தி.மு.க.,வினரும், அவர்களின் தலைமையும் உங்களை கரித்து கொட்டி விடப் போகிறது!

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை: மூத்த குடிமக்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை. அவர்களில் பலர் கட்டண சலுகைக்காகவே ரயில்களில் பயணிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க ரயில்வே வாரியம் முன்வர வேண்டும்.

கொரோனாவுக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும். இதனால், மூத்த குடிமக்கள் ஓட்டாவது, பா.ம.க.,வுக்கு நிச்சயம் கிடைக்கும்!

தமிழக காங்., – எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: திருச்சியில் இருந்து நேரடியாக டில்லிக்கு விமான சேவை துவக்க வேண்டுமென பார்லிமென்டில் கோரிக்கை விடுத்தேன். இச்சேவை துவக்கப்படுவதால் திருச்சி, புதுக்கோட்டை, அரிமளம், திருமயம், காரைக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் பயனடைவர். மேலும், ஸ்ரீரங்கத்திற்கு வட மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

பார்லிமென்டில் பேசி விட்டீர்கள் தானே. விமான போக்குவரத்து துறை அமைச்சரும், முன்னாள் காங்., மூத்த தலைவருமான ஜோதிராதித்யா சிந்தியா நிச்சயம் நிறைவேற்றி விடுவார்; பொறுத்திருங்கள்.

தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை: மஹாராஷ்டிராவில் கொரோனாவால் இறந்த ஒருவருக்கு கூட, நிதியுதவி வழங்கப்படாததை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. இது, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தோல்வியை காட்டுகிறது.

சட்டத்தை மதிக்காத முதல்வர், மஹாராஷ்டிராவில் இருப்பது அந்த மாநில மக்களுக்கு, குறிப்பாக, கொரோனாவால் உறவினர்களை இழந்தவர்களுக்கு நிச்சயம் சோகத்தை தான் ஏற்படுத்தி இருக்கும்!

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், தீவிரவாதிகள் என்று தவறாக கணித்து, 13 சாதாரண தொழிலாளர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இந்த தாக்குதலுக்கு ராணுவமே கவலை தெரிவித்துள்ளதே!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *