Share on Social Media


“மேற்கு வங்கம் இந்தியாவின் பின்தங்கிய மாநிலமாகிவிட்டது, புதிய தொழிற்சாலைகள் உள்ளே வந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும்” என்ற மேற்கு வங்கத்தின் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, 2006-ல் முதலமைச்சராக பதவியேற்ற கையோடு ரத்தன் டாடாவுக்கு நிலம் ஒதுக்கும் வேலைகளைத் தொடங்கினார்.

2006 செப்டம்பர் மாதம் சிங்கூரில் டாடாவுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் தொடங்கியது. ஆண்கள், பெண்கள் என 5000 பேர் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தார்கள். பெரிய தலைவன் இல்லாமல் போராடும் இந்த மக்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்க துடித்த மம்தா பானர்ஜி சிங்கூரில் போய் இறங்கினார்.

மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியையும், புத்ததேவ் பட்டாச்சார்யாவையும், நிலம் கையகப்படுத்தும் முறையையும் திட்டித்தீர்த்த மம்தா பானர்ஜி, ரத்தன் டாடாவைப் பற்றியோ, டாடா நிறுவனம் பற்றியோ எந்த விமர்சனமும் வைக்கவில்லை. “மம்தா ஏன் டாடாவைப் பற்றி வாய் திறக்கவில்லை” என மீடியாக்கள் எழுத ஆரம்பிக்க, மம்தாவை சந்திக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட டாடா அதிகாரிகள் வர இருப்பதாகத் தகவல் பரவ ஆரம்பித்தது. ஆனால், “மம்தா பானர்ஜியை நீங்கள் சந்திப்பது என்னை அவமதிப்பதற்கு சமம். நானே இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்” என ரத்தன் டாடாவிடம் புத்ததேவ் சொல்ல, டாடா அதிகாரிகள் மம்தாவுடனான மீட்டிங் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கேன்சல் செய்தனர். மம்தாவுக்கு தவறியும் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்தைக் கொடுத்து விடக்கூடாது என்பதுதான் புத்ததேவின் எண்ணம்.

புத்ததேவ் பட்டாச்சார்யா

புத்ததேவ் பட்டாச்சார்யா

டாடா நிறுவனம் சிங்கூரில் இருந்து வெளியேற தேதி குறிக்கிறார். சிங்கூர் கலவரப் பூமியாகிறது. சிங்கூருக்குப் போகும் மம்தாவை அந்த நகருக்குள் நுழையவிடாமல் தடுக்கும்போலீஸ், அவரை உலுக்கிப்பிடித்து தூக்கிச்சென்று கைது செய்கிறது. மீடியாக்கள் நேரடியாக மம்தா கைது செய்யப்படும் காட்சிகளைக் காட்டிக்கொண்டிருக்க மம்தாவின் மீது பரிதாப அலை வீச ஆரம்பித்தது. ஆனாலும், தாகம் தீராத மம்தா அங்கிருந்து நேராக சட்டசபைக்குப்போய் கூச்சல்போட, சட்டசபை நடந்துகொண்டிருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்காமல் அங்கும் காவல்துறை தடுக்க, அடுத்த கலவரம் மேற்கு வங்க சட்டசபைக்குள் அரங்கேறியது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *