Share on Social Media


இந்தநிலையில், தி ஃபேமிலி மேன் – 2′ தொடரை தடை செய்யும்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, தமிழகத் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில்,“தி ஃபேமிலி மேன் – 2′ என்ற, ஹிந்தித் தொடரின் முன்னோட்டம், ஈழத் தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை, எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளைக் கொண்டது எனக் கருத முடியாது. தமிழ் பேசும் நடிகையான சமந்தாவை, பயங்கரவாதியாகக் காட்சிப்படுத்தி உள்ளது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடி தாக்குதல். இதுபோன்ற விஷமத்தனமான பரப்புரையை, யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

இந்தத் தொடரின் முன்னோட்டம், ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே, பெரும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது. இந்தத் தொடரானது, ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது, தமிழக தமிழர்களின் உணர்வுகளையும், பெருமளவில் புண்படுத்தி உள்ளது. இத்தொடர் ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினமாகும். அமேசான் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை, தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் - சமந்தா

ஃபேமிலி மேன் வெப் சீரீஸ் – சமந்தா
You tube Screen shot

இந்த சர்ச்சைகள் குறித்து, இந்தத் தொடரின் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே கொடுத்துள்ள விளக்கத்தில்,

“ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு காட்சிகளின் அடிப்படையில் சில ஊகங்களும், கருத்துகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எமது நடிகர்கள் குழுவில் பலர் மற்றும் படைப்பாக்க மற்றும் கதாசிரியர் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தமிழர்கள். தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். தமிழ் மக்கள் மீது அதிக அன்பும், மரியாதையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த சீரீஸ் உருவாக்கத்துக்காகப் பல ஆண்டுகள் கடும் உழைப்பை நாங்கள் தந்திருக்கிறோம். இதன் முதல் சீசனில் நாங்கள் செய்ததைப்போலவே எமது பார்வையாளர்களுக்கு சிறப்பான, உணர்வுகளை மதிக்கிற மற்றும் நடுநிலையான கதையை வழங்குவதற்கு மிகப்பெரிய சிரமங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

புதிய சீசன் ஒளிபரப்பாகும்வரை காத்திருக்குமாறும், நிகழ்ச்சியைப் பார்க்குமாறும் ஒவ்வொருவரையும் நாங்கள் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அதை நீங்கள் பார்க்கும்போது, கதையையும், கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், நடுநிலையான கருத்துகளையும் நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள் என்று நாங்கள் அறிவோம்” எனக் கூறப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *