Share on Social Media


நம் நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் திறனின்மையும், முறையாக திட்டம் வகுக்கப்படாததும் தான் முக்கிய காரணம்.

– பிரியங்கா , பொதுச் செயலர், காங்கிரஸ்

கூட்டாட்சிக்கு சாவுமணி!

மேற்கு வங்க மாநில தலைமைச் செயலர் பந்தோபத்யாய், மத்திய அரசு பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளது, தீங்கிழைக்கும் நடவடிக்கை; இது, கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசியலமைப்பிற்கு அடிக்கப்பட்ட சாவுமணி. இந்த அராஜகமான செயலை மன்னிக்க முடியாது.

– ரந்தீப் சுர்ஜேவாலா , செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

முயற்சி வேண்டும்!

இந்த, 21வது நுாற்றாண்டு இந்தியாவுக்கு உரித்தானது. மக்களின் வாழ்வாதாரத்தில், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும், மாணவர்கள் எடுக்க வேண்டும். சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.நிதின் கட்கரிமத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *