Share on Social Media


இந்நிலையில்தான், சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களை ஆய்வு செய்வதற்காகவும், இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு வருகை புரிந்தார். திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் மெய்யநாதன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ரவி, “இந்த மருத்துவமனையில் ஆபத்துக் காலத்தில் மேல் சிகிச்சைக்கு நோயாளிகளைக் கொண்டு செல்ல ஆக்சிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ் இல்லை’’ எனச் சுட்டிக்காட்டினார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 33 வயது இளைஞர் சத்தியதாசன் உயிரிழந்த பரிதாபத்தையும் அவர் அமைச்சர் மெய்யநாதனிடம் சுட்டிக்காட்டினார். இதைக்கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அமைச்சர், அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினார்.

ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ்

ஆக்சிஜனுடன் கூடிய ஆம்புலன்ஸ்

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரை அழைத்து, “உடனடியாக இப்போதே, ஆக்சிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸுக்கு ஏற்பாடு செய்யுங்கள். 24 மணிநேரமும் இந்த மருத்துவமனையில் அது இயங்க வேண்டும்” என அதிரடியாக உத்தரவிட்டார். அடுத்த 15 நிமிடத்தில், ஆக்சிஜனுடன்கூடிய ஆம்புலன்ஸ் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் மெய்யநாதன், ஆம்புலன்ஸ் சாவியை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த மாவட்டம் திருவாரூர். இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ் இல்லாமல் இருந்தது, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தது. அமைச்சர் மெய்யநாதன் அதிரடியாகச் செயல்பட்டு, உடனடியாக இதற்கு ஏற்பாடு செய்திருப்பது இப்பகுதி மக்கள் மத்தியில் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *