Share on Social Media


இதனால் விவசாயிகள் தேவையற்ற அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், விவசாயிகள் அறுவடை செய்து கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் நனையத் தொடங்கியுள்ளன. இன்னும் சில நாட்கள் வெயில் இன்றி மழை தொடர்ந்து பெய்தால், நேரடி நெல் கொள்முதல் வளாகத்தில் திறந்த வெளியில் வைத்துள்ள 10 ஆயிரம் மூட்டை நெல்மணிகள் முளைக்கத் தொடங்கிவிடுமோ என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டிஎன்சிஎஸ்சி பணியாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இளவரி கூறும்போது, ”அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடகீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

30க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள், நேரடி நெல் கொள்முதல் வாயிலிலேயே கிடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பிறகும்கூடத் திறக்கப்படவில்லை. பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பெய்வதால் நெல் மூட்டைகள் மழையில் நனைய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.





Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *