Share on Social Media


எல்லோருமே `உம்’ சொல்கிற ஒரு விஷயம், `ஊஹூம்’ சொல்ல முடியாத ஒரே விஷயம் காமம்தான். தம்பதிகள் மத்தியில் காமத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசுவதற்காகவே ‘காமத்துக்கு மரியாதை’ என்கிற இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. இதன் இறுதி பாகமான இதில், கணவனும் மனைவியும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன செய்யலாம் என வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ்.

18 நொடிகளுக்கு மேலும் காது கொடுங்கள்!

மனிதர்களில் யாருமே 18 நொடிகளுக்கு மேல் மற்றவர் பேசுவதை காதுகொடுத்துக் கேட்பதில்லை. ஆனால், பதில் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். 18 நொடிகளுக்கு மேல் நீள்கிற ஒரு பேச்சைக் காது கொடுத்துக் கேட்காமலேயே பதில் சொல்வது எந்த உறவுக்குமே நியாயமாக இருக்காது. குறிப்பாக தம்பதியருக்கு… லைஃப் பார்ட்னர் பேசுவதை முழுவதுமாகக் கேளுங்கள். அது உங்களுக்குப் பிடிக்காத விஷயமே என்றாலும் அரைகுறையாகக் கேட்டுவிட்டோ, துணையின் பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டோ பேச ஆரம்பிக்காதீர்கள்.

Couple (Representational Image)

Also Read: காண்டம் கருத்தடைக்கு மட்டுமே அல்ல; இவற்றுக்கும்தான்! – காமத்துக்கு மரியாதை – 19

மனதில் ஒன்று; வார்த்தைகளில் ஒன்று!

தம்பதியர்கள் சண்டையில் ஊன்றி கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். இந்த நிமிஷம் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், அதற்கான காரணங்கள் என்றோ நடந்தவற்றின் எதிரொலியாக இருக்கும். விளைவு, ஒருவர் கோபத்தின் பின்னணி மற்றவருக்குப் புரியாது. அதனால், துணை கோபப்படுகிறார் என்றால், பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்காதீர்கள்!

திருமண வாழ்க்கையைச் சிதைக்கிற முக்கியமான காரணி, துணையிடம் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிற இயல்புதான். எதுவரை குற்றம் காணக்கூடாது தெரியுமா? திருமணம் தாண்டிய உறவு, மனைவியை அடித்துத் துன்புறுத்துவது போன்ற தவறுகளைத் தவிர, தினசரி நடக்கிற சின்னச்சின்ன தவறுகளிலெல்லாம் குற்றம் கண்டுபிடிக்காமல் இருந்தால் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

நியாயப்படுத்துவதற்குப் பதிலாக…

அறியாமல் ஒரு தவறு செய்துவிட்டீர்களென்றால், அதை எதன் வழியாகவும் நியாயப்படுத்தி உங்களைப் பாதுகாக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் செய்வதையே உங்கள் துணையும் செய்ய ஆரம்பிப்பார். அதற்குப் பதில், `நான் இப்படி நினைச்சு செஞ்சேன். அது தப்பாயிடுச்சு. ரொம்ப வருத்தமா இருக்கு’ என்று வெளிப்படையாகப் பேசுங்கள்.

vikatan 2021 09 fd926811 705c 4c6e bcac e2c3ba814ed9 vikatan 2019 11 d7947107 98d4 4028 a0d6 b1c42c3 Tamil News Spot
டாக்டர் காமராஜ்

சண்டையா? அமைதியா?

சில விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இருக்கலாம். அதை சண்டைபோட்டு சத்தமாகவும் சொல்லலாம். நிதானமாகவும் சொல்லலாம். எது உங்களுக்கான வழியென்று நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

காதலன், காதலிபோல இருங்கள்!

காதலன், காதலி மனதில்பட்டதை வெளிப்படையாகப் பேசுவதுபோல, தம்பதிகள் வெளிப்படையாக இருப்பதில்லை. திருமணத்துக்குப் பிறகும் காதல் தொடர வேண்டுமென்றால், காதலிக்கும்போது கடைப்பிடித்த சில குணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

Tamil News Spot
Couple (Representational Image)

இந்த நேரத்தில் பேசாதீர்கள்!

தாம்பத்ய வாழ்க்கைக்கு மிகப்பெரிய எதிரி கோபம்தான். அதைவிடப் பெரிய எதிரி, கோபமாக இருக்கும்போது துணையிடம் அது தொடர்பாக விவாதம் செய்வது. கோபமாக இருக்கும்போது பேசவே பேசாதீர்கள். தேவைக்கு அதிகமாகப் பேசி விடுவீர்கள். அதே நேரம், `உன்கிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு’ என்பதுபோன்ற உடல்மொழியையும் வெளிப்படுத்தி விடாதீர்கள்.

உணர்வுகளை மதியுங்கள்!

வாழ்க்கைத்துணை வருத்தமாக இருக்கையில், `ஆமா நீ கோபமா இருக்கிறேன்னு எனக்குப் புரியுது’ என்று சொன்னாலே பாதி பிரச்னை சரியாகி விடும். துணையின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், `உன் உணர்வு எனக்குப் புரிகிறது’ என்று வெளிப்படுத்தவும் செய்யுங்கள்.

Tamil News Spot
Couple (Representational Image)

இதைச் சேமிக்காதீர்கள்!

கோபத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டிருக்காதீர்கள். என்றைக்காவது கசப்பாக வெளிப்பட்டு, உறவையே கெடுத்துவிடலாம்.

ஆங்காரமும் வேண்டாம்; அடங்கியிருத்தலும் வேண்டாம்!

கணவன், மனைவி இருவருமே கோபக்காரர்களாக இருந்தாலும் வாழ்க்கை ருசிக்காது. இருவரில் ஒருவர் கோபக்காரராக இருந்து திட்டிக்கொண்டே இருக்க, இன்னொருவர் அதை வாங்கிக்கொண்டே இருந்தாலும் வாழ்க்கை ருசிக்காது. இருவருக்குமே இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து இதுதான் என்று தெளிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒருவரின் மகிழ்ச்சி இன்னொருவரின் கையிலா?

நம்முடைய பார்ட்னர்தான் நம்மை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தக்கால இளம் தம்பதியர்கூட நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், நாம் அனைவருமே தனித்தனி மனிதர்கள். நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நம்முடைய மகிழ்ச்சி பார்ட்னரின் கையில்தான் என்று நினைத்துவிட்டால், `என் கஷ்டத்துக்கெல்லாம் நீ தான் காரணம்’ என்று துணையை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிடுவோம்.

Tamil News Spot
Couple(Representational image)

Also Read: ஆர்கஸம் தெரியும்; எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் தெரியுமா? – காமத்துக்கு மரியாதை – 7

தோழமையாக இருங்கள். காமத்துக்கு முன் உடலைச் சுத்தமாக்கிக்கொள்ளுங்கள். துணையின் ஆர்கசத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். முடிந்தால் தினந்தோறும்கூட உறவுகொள்ளுங்கள். ஆடைகள், பூக்கள், விதவிதமான நிலைகள் என்று காமத்தை அணுஅணுவாக ரசித்து வாழுங்கள்” என்றார்.

முற்றும்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.