Share on Social Media


மதுரை : மதுரை மாவட்ட ஊராட்சி 16 வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற திருமங்கலம் பார்முலாவை மீண்டும் தி.மு.க.,வினர் கையாள்கின்றனர்.

ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லுார் ராஜூ, எம்.எல்.ஏ.,க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், அய்யப்பன், மாவட்ட ஊராட்சி கவுன்சில் வேட்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர். மாவட்ட ஊராட்சி 16 வது வார்டில் அ.தி.மு.க.,வெற்றி பெற்றுள்ளது. தற்போது வெற்றி வாய்ப்புள்ளது.

ஆனால் தி.மு.க.,வின் திருமங்கலம் பார்முலாவை கையில் எடுத்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர் என கலெக்டரிடம் குற்றம் சாட்டினர்.பின் உதயகுமார் கூறுகையில், ”தேர்தல் நடக்கும் 97 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தி வருகிறோம். 10 ஓட்டுச்சாவடிகளில் மட்டுமே பொருத்தியுள்ளனர். ஜனநாயக முறைப்படி வாக்காளர்களை ஓட்டளிக்க விடாமல் தி.மு.க.,வினர் அச்சுறுத்துகின்றனர். வாக்காளர்களுக்கு சேலை உள்ளிட்டவைகளை வழங்குகின்றனர். நீதிமன்றம் உத்தரவின்படி ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும். ஓட்டு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்றார். பின்னர் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம் புகார் அளித்தனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *