Tamil News large 2633910 Tamil News Spot
Share on Social Media

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரியில் அமைக்கப்பட்ட, 3,500 கிலோ திரவ ஆக்சிஜன் தொட்டி முழு பயன்பாட்டுக்கு வந்தது.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நுாற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இருந்த வரை, 7,000 கிலோ கொண்ட, 97 காஸ் சிலிண்டர்; 1,500 கிலோ கொள்ளளவில், 220 காஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் இருந்தன. அவசர சிகிச்சை பிரிவுக்காக, 1,000 லிட்டர் கொள்ளளவில், திரவ ஆக்சிஜன் தொட்டியும் பொருத்தப்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகளுக்கு, அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டதால், கூடுதல் வசதிகளை செய்யலாம் என, சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, கூடுதலாக, 3,500 கிலோ கொள்ளளவு கொண்ட, திரவ ஆக்சிஜன் தொட்டி அமைக்க, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.’டீன்’ வள்ளி கூறுகையில், ”மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 3.5 கி.லி., கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி பொருத்தப்பட்டது. கடந்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இரு நாட்களுக்கு ஒருமுறை, தொட்டி நிரப்பப்படுகிறது. ஐ.சி.யு., வில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மொத்த தேவை, 20 மடங்கு அதிகரித்துள்ளது. எதிர்கால தேவைக்காக, 10 கி.லி., திரவ ஆக்சிஜன் தொட்டி அமைக்கவும், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *