Share on Social Media


திருப்பாச்சேத்தி:திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் ஷட்டர் சேதமடைந்ததால் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள்நீரில் மூழ்கியுள்ளன.
திருப்பாச்சேத்தி கிழக்கு, செம்பராயனேந்தல், மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கரில்நெல் பயிரிடப்பட்டுஉள்ளது. திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயின் அடையாமடை வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேறி திருப்பாச்சேத்தி காலனி பகுதிக்குள் புகுந்து வீடு, வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
திருப்பாச்சேத்தியில் இருந்து மழவராயனேந்தல் செல்லும் ரோட்டை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.திருப்பாச்சேத்தி கிழக்கு, மழவராயனேந்தல், செம்பராயனேந்தல் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.தாசில்தார்கள் தமிழரசன் (மானாமதுரை), ரத்னவேல்பாண்டியன் (திருப்புவனம்) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விவசாயி இளங்கோ கூறுகையில், திருப்பாச்சேத்தி கண்மாயை ஆக்கிரமித்து கரும்பு, வாழை பயிரிட்டுள்ள ஆக்கிரமிப்பாளர்கள் அடையாமடை ஷட்டரை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியதால் எங்கள் பகுதி வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
புரட்டாசியில் நடவு செய்து தை மாதம் அறுவடை செய்ய வேண்டியநெற்கதிர்கள் நான்கு நாட்களாக இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. தாசில்தார்கள் பார்வையிட்டும், தண்ணீர் வெளியேற வழிவகை செய்யாததால் பயிர்கள் அழுகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன, என்றார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.