Share on Social Media


‘திருநங்கையரும் தங்கங்களே!’

24 டிச, 2020 – 06:47 IST

எழுத்தின் அளவு:


gays-are-also-worthy

திருநங்கையர் குறித்த படங்கள் பல, அவர்களை இழிவுப்படுத்தியோ அல்லது பரிதாபமாகக் காட்டியோ தான் வந்துள்ளன. ஆனால், அவர்களும் மனிதர்களே என்பதை சொல்லால் மட்டுமின்றி, செயலிலும் காட்ட நினைத்த விஜயபாஸ்கர், பில்டர் கோல்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.படம் குறித்து, விஜயபாஸ்கர் கூறியதாவது:பில்டர் கோல்ட் என்றால், சொக்கத்தங்கம் என அர்த்தம். ரஜினிக்கு தளபதி, கமலுக்கு நாயகன் போல், திருநங்கையருக்கு, இந்த படம் இருக்கும். மார்ச் மாதமே படப்பிடிப்பு முடிந்து, ‘சென்சார்’ ஆனது. படத்தை பார்த்த அதிகாரி, ‘இதுமாதிரி ஒரு படத்தை பார்த்ததே இல்லை’ என பாராட்டினார்.இது எனக்கு, நம்பிக்கையை தந்துள்ளது. படத்தில், ஆடியோவுக்கு மட்டும், 60 இடங்களில், ‘மியூட்’ கொடுத்துள்ளனர். படம், ‘ஏ’ சான்றுடன் வெளியாகிறது. இதில் திருநங்கையரின் காதல், நட்பு, வலி, கோபம் என அனைத்தையும், எதையும் மிகைப்படுத்தாமலும், மறைக்காமலும் படமாக்கியுள்ளேன்.ஒரு பாடலுக்கு, 800 திருநங்கையர் நடித்துள்ளனர். இதில் டோராஸ்ரீ என்ற திருநங்கையோடு, நான் மற்றும் சுகுமார் சண்முகம் இருவரும், திருநங்கையாக நடித்துள்ளோம். படத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஜனவரியில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *