Share on Social Media


முன் மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரி நேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அறவே நீங்குகிறது என்கின்றனர்.

குடைவரைக் கோயில். பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் மிக முக்கிய திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்தக் குடைவரைக் கோயிலின் அருகே இருக்கும் இந்தப் பிரமாண்டப் பாறைகளின் மேல் சமணர் படுகைகள் வரிசை, வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. கிபி 7-ம் நூற்றாண்டுக்கு முன்னர் சமண சமயம் வேகமாகப் பரவி செழித்திருக்க வேண்டும் என்பதை இங்குள்ள சமணர் படுக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

மலையடிப்பட்டி ஓவியங்கள்

மலையடிப்பட்டி ஓவியங்கள்

எப்படிச் செல்வது:

திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 33 கி.மீ தொலைவிலும் இருக்கிறது மலையடிப்பட்டி கிராமம். திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியை அடுத்த கிள்ளுக் கோட்டை பிரிவு சாலையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள். இரண்டு கோயில்களும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்து கிராமப் பேருந்து வசதிகளும் உண்டு. குடைவரைக் கோயில் செல்பவர்கள் இங்குள்ள ஓவியங்களின் அழகையும், சிவபெருமான், விஷ்ணு பெருமானின் அருளையும் பெற்றுச் செல்லலாம். சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனத்தில் வந்து செல்லலாம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *