Share on Social Media


`அ.தி.மு.க பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் ஆனவர், போலீஸாரிடம்` “என்னைத் தயவு செய்து வெளியில் நிற்கச் சொல்லாதீர்கள். நான் வெளியில் நின்றால் என்னைக் கடத்தி சென்று கொன்றுவிடுவார்கள்” எனக் கொஞ்சிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க பிரமுகர் திருமாறன்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரைச் சேர்ந்தவர் திருமாறன். இவர் தே.மு.தி.க-வில் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். சமீபகாலமாக அ.தி.மு.க பிரமுகராக வலம் வந்தார். இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக மேன்பவர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். தொழிலதிபரான இவர் தனது திருமண நாளான சனிக்கிழமை அன்று மறைமலைநகரில் உள்ள முருகன் கோவிலுக்கு குடும்பத்தாருடன் வந்திருந்தார். அன்று கோயிலுக்கு வந்த பக்கதர்களுக்கு பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அங்கு பைக்கில் வந்த 5 போ் கொண்ட கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் தப்பி ஓடிய கொலையாளிகளை நோக்கி அவருக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் 6 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில் திருவள்ளூரை அடுத்த ஆத்தூர் கிராமத்தைச்சேர்ந்த சுரேஷ் என்பவர்க் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

8cf6dc93 ea94 4dd6 b039 c46d7915278a Tamil News Spot
நீதிமன்றத்தில் ஆஜரான ராஜேஷ்

மற்ற மூவரும் தப்பி ஓடி விட்டனா். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். குண்டு வெடித்ததில் அங்கிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓட அந்த கோவிலே அல்லோல்லப்பட்டது. திருமாறன் கார் டிரைவர் சுரேஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மறைமலைநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார். அங்கு தான் அவர் போலீஸாரிடம் கதறியிருக்கிறார்.

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் போலீஸார் தரப்பில் விசாரித்தோம். “திருமாறன், ராஜேஷ் இருவரும் நண்பர்கள். இருவருமே இணைந்து தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் கன்சல்டன்ஸி வேலை செய்து வந்தனர். அதில், நல்ல வருமானம் கிடைத்துள்ளது. பின்னர் இந்த தொழிலைத் தனியாகச் செய்தால் என்ன என்று ராஜேஷை கழட்டிவிட்டு தனியாகத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார் திருமாறன். தொடர்ந்து, ராஜேஷுக்கு எதிராகப் பல வேலைகளும் செய்யத் தொடங்கினார்.

64f4bb95 f4e8 4b7c bb7b 4054a51d6919 Tamil News Spot
போலீஸாரிடம் கதறிய ராஜேஷ்

இதனைத்தெரிந்துக்கொண்ட ராஜேஷ் பலமுறை திருமாறனை அழைத்து எச்சரித்துள்ளார். அவர் கட்சிப் பதவிகளைக் கொண்டு மிரட்டியிருக்கிறார். இதனால் அவரது குடும்பம் கொஞ்சக் காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்க்கொண்டது. அவரது அட்ராசிட்டிகளை தாங்கிக்கொள்ளமுடியாத ராஜேஷ். அவரை ஐந்து முறை கொலைசெய்யத் திட்டமிட்டார். அது நடக்கவில்லை. ஆறாவது முறையாகத்தான் கூலிப்படைகளைக் கொண்டு பொட்ரோல் குண்டு வீசி கொலை செய்திருக்கிறார்.

3ecc835e cae0 431e a197 7f9aa24cc350 Tamil News Spot
ராஜேஷ்

நேற்று (26ம்) காலையிலேயே நீதிமன்றத்திற்குள் வந்தவர். தயவு செய்து என்னை நீதிமன்றத்தை விட்டு வெளியில் நிற்கச் சொல்லாதீர்கள். நான் வெளியில் நின்றால் என்னைக் கடத்தி சென்று கொன்றுவிடுவார்கள். நான் நீதிபதியின் கண்முன்னே உக்கார்ந்துக்கொண்டார். அவரை எதிர் தரப்பினர் கொன்றுவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது” என்றனர் போலீஸ் தரப்பில்.

இந்த கொலை வழக்கில் இன்று மேலும் 6 பேர் சரணடந்துள்ளனர் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கதுSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *