Share on Social Media


அறுவை சிகிச்சை என்பது, வாய்க்காலை உடைத்து நீர்போக்குவரத்தை சரி செய்வது போலதான். கண்களுக்குள் நீர் செல்லும்பாதையில் சிறிய ஹோல் போட்டு சரி செய்வது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பெயர் Trabeculectomy. சிலருக்கு ஹோல் போட்ட இடத்தில் ஐந்தாறு வருடங்கள் கழித்து அடைப்பு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் மருந்து மட்டுமே தீர்வு. தொடர்ந்து பரிசோதனைக்கு வந்தால்தான் இதைக் கண்டறிய முடியும்.

இந்த Trabeculectomy அறுவை சிகிச்சையிலும் சில ரிஸ்க் இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவருக்கு இருக்கும் பார்வையும் பறிபோகும் வாய்ப்பிருக்கிறது. 95 சதவிகிதம் பாதிப்பு இருப்பவர்களுக்கு இது நடக்கலாம். அதனால் சீக்கிரமே கண்டறிவது நல்லது.” என்கிறார் வினோத்.

வினோத் கண் மருத்துவமனை

வினோத் கண் மருத்துவமனை
DIXITH

வழக்கமாக மருத்துவர்கள் பத்திரிகையாளர்களுடனான சந்திப்புகளில் தங்கள் மருத்துவமனையைப் பற்றியும் தங்கள் நிபுணத்துவத்தைப் பற்றியுமே அதிகம் பேசுவார்கள். வினோத், வித்தியாசப்படுகிறார். அவருடனான உரையாடலின் பெரும்பகுதி கண் பாதுகாப்பு, குளுக்கோமா பற்றியதாகவே இருக்கிறது.

அரவிந்த் மருத்துவமனையில் அவர் கற்ற மருத்துவக் கல்வி அவரைப் பண்படுத்தியிருக்கிறது. எந்த நோயாளிக்கு எது தேவை, எது தேவையில்லை என்று வழிநடத்துவதுதான் நல்ல மருத்துவரின் பண்பு. வினோத், அதில் தெளிவாக இருக்கிறார். நோயாளி நடந்துவரும் தன்மையை வைத்தே அவரின் பிரச்னையைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர் நிபுணத்துவமும் பெற்றிருக்கிறார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *