Share on Social Media


திருச்சி: திருச்சி மாவட்டம் புலிவலத்தில் நீர்நிலைகள் தூர்வாரக்கூடிய பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாருவது குறித்து ஆய்வு செய்த பின் முதல்வர் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள புலிவலம் கிராமத்தில் இருக்கக்கூடிய வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு வருகிறார். நீர்நிலைகளை தூர்வாருவதற்காக கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அப்பணிகள் டெல்டா மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதேபோல் திருச்சி மாவட்டத்திற்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. உய்யகொண்டான் வாய்க்கால் பாசன விவசாய சங்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கையானது பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வந்தது. அதாவது கொடியானம் மற்றும் புலிவலம் கிராமத்தில் இருந்து மணற்போக்கில் செல்லும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும். அதன்படி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்த பணிகளையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் காவேரி நீரானது திறந்துவிடப்படும் நிலையில், திருச்சி மாவட்டத்தை தாண்டி அதாவது தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேர வேண்டும் என்பதற்காக நீர் நிலைகள் தொடர்ந்து தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனையும் முதல்வர் இன்று ஆய்வு செய்து வருகிறார். 



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *