Share on Social Media


வழக்கறிஞர் சதீஷ் பிரபு எழுதி விகடனில் வந்த கவிதை இப்படிக் கேட்டது…

கல்வியாண்டின்

இறுதியில் நடக்கும்

ஆண்டு விழாவின்

மாறுவேடப் போட்டிவரை

காத்திருக்க வேண்டியிருக்கிறது

ஒரு குறவனின் மகனோ

குறத்தியின் மகளோ

மழலையர் பள்ளியில்

நுழைவதற்கு.

இப்படி கசிந்துருகும் மனத்தையே கவிமனம் என்கிறோம். இந்த கவிமனமே ஒரு கலெக்டருக்கு இருந்தால் என்ன நடக்கும்? பழங்குடி மக்களுக்கு நிரந்தர வீடு கிடைக்கும். அதனால் முகவரி வரும். அதன்பின் ஆண்டுவிழாவரை காத்திருக்காமல் அந்தப் பிள்ளைகள் பள்ளிக்கு போகமுடியும். இப்படி நிரந்தர குடியிருப்பை அந்த மக்களுக்கு செய்துகொடுத்தவர் கலெக்டர் ஆர்.எஸ்.மலையப்பன்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல் முறையாக பழங்குடி மக்களுக்கு நிரந்தரக் குடியிருப்பை, இவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோதுதான் கட்டிக்கொடுத்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் 8வது திருச்சி மாவட்ட கலெக்டராக பணியமர்ந்தபோது, திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் முக்கிய சாலையில் 20 கி.மீ தொலைவில் திருவறும்பூருக்கு அருகில் உள்ள ‘தேவராயன் ஏரி’ பகுதியில்தான் அவர்களுக்கான நிரந்தரக் குடியிருப்பை கலெக்டர் மலையப்பன் கட்டிக்கொடுத்தார். ஏரிப்பாசனம் உள்ள பகுதியிது.

கண்ணந்தங்குடி மேலையூர்

கண்ணந்தங்குடி மேலையூர்

1955ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக ஆர்.எஸ் மலையப்பன் பணியேற்று செயல்பட்ட காலம் திருச்சி மக்களால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.

உரத்தநாடுக்கு அருகிலுள்ள கண்ணந்தங்குடி மேலையூரில், தந்தை ராமசாமிக்கும் தாய் கமலாயிக்கும் 1902 செப்டம்பர் 7-ம் தேதி மலையப்பன் பிறந்தார். எளிமையான ஆனால் வளமையான விவசாயக் குடும்பமது.

கண்ணந்தங்குடி மேலையூர்

கண்ணந்தங்குடி மேலையூர்

தொடக்கக் கல்வியை சொந்த ஊரின் பாதிரிப் பள்ளியிலும், பள்ளிப் படிப்பை உரத்தநாட்டில் உள்ள சரபோஜி மன்னனின் காதலி பெயரில் அமைந்த முத்தம்மாள் சத்திரம் பள்ளியிலும் அதைத் தொடர்ந்து திருச்சி தேசியப் பள்ளியிலும் முடித்தார். திருச்சியில் உள்ள எஸ்.பி.ஜி கல்லூரியில் (பிஷப் கல்லூரி) பி.ஏ. பட்டம் பெற்றார். அந்தச் சுற்று வட்டாரத்தில் முதல் பட்டதாரி என்ற பெருமையை 100 ஆண்டுகளுக்கு முன்பே மலையப்பன் பெற அவரது பெரியப்பா கிருஷ்ணசாமிதான் காரணம்.

சிறிதுகாலம் அவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியப்பணி செய்த மலையப்பன், தன் முயற்சியால் சென்னை தலைமைச் செயலகத்தில் 1927-ல் மேல்நிலை எழுத்தராக பணியமர்ந்தார். தன் கல்விக்கேற்ற வேலை தேடிய மலையப்பன், பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் தேர்வாகி 1935-ல் ‘துணை கலெக்டர்’ ஆனார். அடுத்து வந்த 20 ஆண்டுகளில் அவர் செய்த பணியும் அர்பணிப்பும் மக்கள்மீது கொண்ட மாளாக்காதலும்தான் அவரை மக்கள் கலெக்டராக உயர்த்தியது.

முத்தம்மாள் சத்திரம் பள்ளி

முத்தம்மாள் சத்திரம் பள்ளி

தமிழ்நாடு ஆந்திரா எல்லாம் ஒன்றாக இருந்த ‘மெட்ராஸ் பிரசிடென்ஸி’தான் அப்போதைய மாநிலம். அதில் ஆந்திராவின் குண்டூருக்கு டெபுடி கலெக்டராக பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். பயிற்சி முடித்து, முதன்முதலாக ‘கோட்ட வருவாய் அதிகாரி’யாக (RDO) மார்க்காபூரில் பொறுப்பேற்றார் மலையப்பன். அப்போது ஒரு பெரும் புயல் அப்பகுதியை தாக்கியது. அதில் ஓங்கோல் மக்கள் சிக்கித் தவித்தனர். மீட்புப்பணியை பார்வையிடவிடாமல் கிருஷ்ணாநதியில் பெருக்கெடுத்த வெள்ளம் தடுத்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *