Share on Social Media


சோழர்களின் தலை நகரங்களாக உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை ஆகியன குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் உறையூரும் காவிரிப்பூம்பட்டினமும் சங்ககால சோழர்களின் தலைநகரங்களாகும். இன்று திருச்சியின் ஒரு பகுதியாக உறையூர் உள்ளது.

இந்த உறையூரைத்தான், “மாட மதுரையும் பீடார் உறந்தையும்” என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் புகழ்கிறது. ‘பீடார் உறந்தை’ என்றால் பெருமை மிகுந்த உறையூர் என்று அர்த்தம்.

அகநானூற்றுப் பாடல் இன்றுள்ள மலைக்கோட்டையை, “கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றத்து” என்று குறிப்பிடுகிறது. அதாவது உறையூருக்கு கிழக்கே உள்ள குன்றம் என்று மலைக்கோட்டையை அகநானூறு குறிப்பிடுகிறது. அதனால் இன்றைய மலைக்கோட்டைக்கு மேற்கே, இன்றுள்ள உறையூரோ அல்லது அதன் அருகேயோ சங்க கால உறையூர் இருந்துள்ளது என்று நாம் யூகிக்கலாம்.

காந்தி மார்க்கெட் - திருச்சி

காந்தி மார்க்கெட் – திருச்சி
DIXITH

சங்க கால உறையூர் கோழியூர் என்றும் அழைக்கப்பட்டது. கோழி என்றால் செழுமை என்று பொருள். கோழியூர் என்றால் வளமான செழுமையான ஊர் என்று பொருள்.

ஒரு யானையை கோழி ஒன்று எதிர்த்து வென்றதாகவும் அதைப்பார்த்த மன்னன் அந்த வீரத்தை வியந்து அங்கே ஒரு கோட்டை கட்டி அதை கோழியூர் என்றதாகவும் ஒரு புனைவு பேசப்படுகிறது.

பக்தி இலக்கிய காலத்தில் திருச்சிராப்பள்ளியை, “சிராப்பள்ளி குன்றுடையானைக் கூற என்னுளம் குளிரும்மே” என்று தேவாரம் குறிப்பிடுகிறது.

பொன்மலை, திருச்சி

பொன்மலை, திருச்சி
DIXITH

மன்னர்களின் அரண்மனைகள் இல்லாமல் போக அதே காலத்தில் எழுந்த அணைகளும், (கல்லணை) கோயில்களும் நிலைத்து நிற்கிறதே ஏன் என்ற கேள்வி வரத்தான் செய்கிறது. எந்தக் காலத்துக்கும் ஆன பதிலே அனுபவமாக விரிகிறது. அதிகாரத்தின் அடையாளமான அரண்மனைகள் அழிந்துபோக, பயன்பாட்டின் விளைச்சலான அணைகளும், கோயில்களும் வாழ்கின்றன. இப்படியான சரித்திர அனுபவமே திருச்சியின் வரலாறு. அதில் என்னென்னவோ இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *