Share on Social Media


திருச்சி அம்மா மண்டபம் படித்துறை என்றாலே தமிழகத்திலுள்ள பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரியும். மாலை நேரத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரிலாக்ஸ் செய்யும் முக்கிய இடமாக விளங்கி வருகிறது இந்தப் படித்துறை.

ஸ்ரீரங்கம்

குடகு மலையில் தோன்றி, வங்காள விரிகுடாவில் கலக்கும்வரை செல்லுமிடமெல்லாம் வளத்தை மட்டுமே சேர்த்து மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தும் வகையில், இடைவிடாது ஓடி கொண்டிருக்கிறது காவிரி. அந்த ஆற்றைத் தரிசித்து, அதன் அமுத நீரைக் கைநிறைய அள்ளிப் பருகி தாகம் தீர, மனம் குளிர திருச்சியில் உள்ள அனைவரும் செல்வது ‘அம்மா மண்டபம் படித்துறை’க்குத்தான்.

ஸ்ரீரங்கம் என்னும் ஆற்றுத் தீவின் ஒரு கரையில் பெரும் ஆர்ப்பரிப்போடு ஓடிக்கொண்டிருக்கும் காவிரிதான் திருச்சி வாழ் மக்களின் பெரும் முக்கிய ஸ்பாட். ஆன்மிகப் பயணிகள், தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என அனைவருக்குமான ரிலாக்சிங் ஸ்பாட்டும் இந்தப் படித்துறைதான். ‘வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது என்ன ரிலாக்ஸ் பாயிண்ட்?’ என உங்களுக்கு சந்தேகம் எழலாம். ஆம், அம்மா மண்டப படித்துறையின் நுழைவு வாயிலில் உள்ள மண்டபத்திற்கு பெரும் வரலாறே உள்ளது.

WhatsApp Image 2021 10 03 at 12 06 48 AM Tamil News Spot
திருச்சி மலைக்கோட்டை

கர்நாடகாவில் ஹோய்சால மன்னர்களால் அணை கட்டி தடுத்தி நிறுத்தபட்ட காவிரியை, இங்கு கொண்டு வரும் பொருட்டு படையை திரட்டி சென்ற ராணி மங்கம்மாளுக்கு வேலையே வைக்க விடாமல் இயற்கை, மழையை கொட்டி தீர்க்க… காவிரியின் அணை, உடைந்து திருச்சிக்குக் காவிரியின் நீர் வந்து சேர்ந்தது. இதனை கொண்டாட ராணி மங்கம்மாவால் கட்டப்பட்டதே இந்த மண்டபம் எனவும், அவரின் பெயரில் அழைக்கப்பட்ட மண்டபம் மருவி அம்மா மண்டபமாக மாறியது எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

Also Read: திருச்சி ஹேங்கவுட்: வனமெங்கும் மூலிகை வாசம், மனதிற்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும் கோரையாறு அருவி!

திருச்சியில் வருடம் முழுவதும் மக்கள் கூட்டம் மிகுந்து இருக்கும் இடத்தில் இந்த அம்மாமண்டபம் படித்துறை முதலிடத்தில் உள்ளது. எப்போது எங்கு திருவிழா விசேஷம் என எது நடந்தாலும், அதில் அம்மா மண்டபத்தின் பங்கு பெருமளவு இருக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு பெரும்பாலான நாள்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த அழகிய படித்துறையை காணாமலே இருக்க முடியுமா? படித்துறையில் ஞாபகம் வந்ததும் கிளம்பிவிட்டோம்.

0dfcf111 3249 4d2b b9e8 d4ea017080e9 Tamil News Spot
மண்டபப் படித்துறை

அங்கு நாம் சென்று அனுபவித்ததை, ரசித்ததைக் கூற வார்த்தைகளைத் தேடி கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீரங்கம் பெரிய கோபுரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது இந்தப் படித்துறை. செல்லவேண்டும் எனத் திட்டமிட்டு ஒரு விடுமுறை நாளின் மதிய நேரமாக பார்த்து நண்பர்களுடன் கிளம்பினோம். வெயில் சுட்டெரித்த அந்த நேரத்தில், மாம்பழத் தோட்டங்களையும், வாகன இரைச்சல்களையும் கடந்து அம்மா மண்டபம் வந்தடைந்தால் அங்கு குழந்தைகளும், குடும்பங்களுமாய் காவிரியில் தன்னை ஒப்புவித்து கொண்டிருந்தனர்.

நாமும் நம்முடைய வாகனங்களை நிறுத்திவிட்டு படித்துறையில் அருகே சென்று காவிரியின் வாசத்தை நுகர்ந்தோம். நகரின் மையத்தில், வாகன இரைச்சல்கள் கேட்டுகொண்டே இருக்கும் சாலையின் ஓரத்தில் எந்த இடையூறும் இல்லாமல் ஒட்டுமொத்த இயற்கை அழகையும் தன்னகத்தே கொண்டு பெரும் சலசலப்புடன் ஓடி கொண்டிருந்தது காவிரி. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நீரும், அதனின் நிறமும், அதற்கு பின் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் மரங்களும் வேற லெவல் ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்தது.

eef65027 88cb 4cfd a0b5 65d64478c845 Tamil News Spot
மண்டபப் படித்துறை

காவேரியின் மயக்கத்தில், நீரின் ஆழத்திற்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நிறைய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நாம் நண்பர்களுடன் காவேரியில் விளையாடத் தயாராகி கொண்டிருந்தோம், ‘இங்க வந்துட்டு இன்னும் என்ன யோசனை’ என மனசாட்சி கேள்வி கேட்க, ‘குதிச்சிடுறா கைப்பிள்ள’ என நீரில் குதித்தோம். நீரின் குளுமை நம்மை அப்படியே அள்ளி கொள்ள, வெப்பத்தின் கொடுமை நம்மைவிட்டு செல்வதை உண்மையாகவே உணர முடிந்தது.

Also Read: திருச்சி – ஊறும் வரலாறு 13: உறைந்த இசை… `திருச்சியின் மகன்’ எம்.கே.டி.பாகவதர் வரலாறு!

நண்பர்களுடன் சென்றதால் எந்த இடைஞ்சலும் இல்லாமல், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாக காவிரியில் நீராடிவிட்டு மேலேறினோம். கூடவே மனது லேசானதை உணர்த்த, சந்தோச உணர்வையும், சேர்ந்தே கொண்டு வந்தோம். வந்ததும் வயிறு மட்டும் சந்தோசப்படவில்லை எனப் புரிய அருகிலேயே பல கடைகள் இருப்பதால் உணவகம் ஒன்றிற்குள் சென்று வயிற்றையும் சந்தோசப்படுத்தினோம்.

295e20b6 9e4e 4b5a bbe5 44a8c53ed4ee Tamil News Spot
மண்டபப் படித்துறை

அங்கு குழந்தைகளுடன் வந்திருந்த மலர்க்கொடியிடம் பேசினோம், “எனக்கு இங்க திருச்சிதான் சொந்த ஊரு. எங்கயாவது குழந்தைகளை வெளியில கூட்டிட்டுப் போகணும்னு நினைச்சா ஸ்ரீரங்கம் வந்துடுவோம். அப்படி ஒருமுறை வரும்போதுதான் இங்க குழந்தைகளை கூட்டிட்டு வந்தோம். வந்ததும் அவங்களுக்கு இங்க வந்தது புடிச்சிடுச்சி. அதனால, அடிக்கடி இங்க வர சொல்லி கேப்பாங்க.

ee172ce7 6050 409a 99e3 51b48aa34556 Tamil News Spot
மண்டபப் படித்துறை

இங்க ரொம்ப சேப்டியா, நம்ம காவேரில குளிச்சிட்டு, சாப்பாடு எடுத்துட்டு வந்தா அதை குடும்பமா உக்காந்து சாப்புட்டு சந்தோஷப்பட்டுட்டு போகலாம். சுத்தமா இங்க செலவே இல்ல! ஆனா குழந்தைங்க, நாங்க எல்லாருமே செம ஜாலியா வீட்டுக்கு போகலாம். அதும் பக்கத்து வீட்ல, சொந்தக்காரங்கனு கூட்டம் சேர்ந்துட்டா ரொம்ப சந்தோசம் என்ஜாய் பண்ணலாம். முக்கியமா பாதுகாப்பாவும் இருக்கலாம்” முடித்தார்.

caae2fc0 8c9f 4a61 af36 b8b9b509a36a Tamil News Spot
போலீஸார்

கொரோனா கட்டுப்பாடுகளால் வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாள்களைத் தவிர்த்து மற்ற நாள்களில் ஆன்மிகவாதிகளால் மட்டுமல்லாமல் காவிரியை நேசிக்கும் மக்களாலும் திக்குமுக்காடும் அம்மாமண்டபத்தை ரசிக்கத் தவறாதீர்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *