Share on Social Media

சிங்காரத்தோப்பு – இது, திருச்சியில் உள்ள மக்கள் நாள்தோறும் உச்சரிக்கும் வார்த்தை. சென்னைக்கு அடுத்தப்படியாக சிங்காரத்தோப்புதான் பெரிய பஜார் பகுதி என்பதை வெளி மாவட்டக்காரர்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள். பஜார் மட்டும்தான் இங்கு பேமஸா என்றால் இல்லை. திருச்சியின் பெருமையான ‘மலைக்கோட்டை’ இருப்பதும் இங்கேதான். அது மட்டுமல்லாமல் ராணி மங்கம்மாளின் கொலு மண்டபம், தெப்பக்குளம், பல்லவர் கால குகைகள் என வரலாற்றுச் சிறப்புமிக்க பல பகுதிகள் அனைத்தும் இங்கேதான் உள்ளன.

சிங்காரத்தோப்பு

“குண்டூசியில இருந்து குத்துவிளக்கு வரை வாங்கணுமா? திருச்சில எல்லாமே கிடைக்குற ஒரே இடம் சிங்காரத்தோப்பு மட்டும்தான். சென்னைக்கு எப்படி தி.நகர் எல்லாருக்கும் பிடிச்ச, எல்லாருக்கும் தேவைப்படுற பொருள்கள் நிறைந்த ஒரு இடமோ, அதே போல திருச்சில இருக்க ஒரு இடம்னா அது சிங்காரத்தோப்புதாங்க” என்கிறார்கள் திருச்சிவாசிகள்.

இங்கே இல்லாத பொருள்களே இல்லை எனச் சொல்லலாம். மேக்கப் பொருள்கள், அலங்கார பொருள்கள், நகைகள், வீட்டுக்குத் தேவையான பாத்திரங்கள், புத்தகங்கள், மளிகைப் பொருள்கள், துணிகள் என நமக்கு எது தேவையோ அதை ஏ டு இசட் இந்தச் சிங்காரத்தோப்பில் வாங்கிவிடலாம். நாமும் ஒரு மாலை வேளையில் சிங்காரத்தோப்புக்கு விசிட் அடித்தோம்.

ed8a1450 1ca5 483c a573 a1f899468769 Tamil News Spot
சிங்காரத்தோப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இருப்பதனால், எப்போதும் இங்கு வருவதவற்கு போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. அதனால், ஈஸியாக சிங்காரத்தோப்பு வந்துவிடலாம். முன்புறமிருக்கும் நுழைவுவளைவைக் கடந்து உள்ளே சென்றால் இரு பக்கமும் விதவிதமான கடைகள் அணிவகுத்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாகத் துணிக்கடைகளில் ரூ.69-ல் இருந்து எல்லாம் சேலைகள் விற்பனை ஆகிக்கொண்டிருந்தன. மக்கள் கூட்டமோ தாறுமாறாக இருந்தது.

திரும்பிய பக்கமெல்லாம் நம்மை அழைத்து கொண்டிருக்க, நாம் ஒவ்வொன்றையும் கடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கிருக்கும் பொருள்களை பார்த்து நாம் பிராமிப்பில் ஆழ்ந்து கிடக்க, இன்னும் இன்னும் அதை அதிகப்படுத்தும் விதமாக கடைகள் நீண்டு கொண்டே சென்றன. துணிக்கடை, நகைகடைகளுடன் கூடவே நாட்டுமருந்து கடைகளும் வியாபித்திருந்தன.

edc54a35 8838 47d2 bb19 251af8b03b15 Tamil News Spot
சிங்காரத்தோப்பில் மக்கள்

இங்கு இருக்கும் மற்றொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பழைய புத்தக கடைகள்தான், எல்.கே.ஜி-யில் இருந்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராவது வரை எந்தப் புத்தகமாக இருந்தாலும் மிகக் குறைவான விலையில் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயார் ஆகுபவர்களுக்கு ஆக சிறந்த இடமாக இந்த இடத்தை கருதுகின்றனர். பஜார் மட்டும்தான் இங்கு பேமஸா என்றால் இல்லை.

a88adb93 8f5e 4d8d 817f 2d6f57126d91 Tamil News Spot
சிங்காரத்தோப்பில் மக்கள்

ஹோட்டல்களுக்கும் இங்கு பஞ்சமில்லாததால் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருக்குமான ஆக சிறந்த இடமாக சிங்காரத்தோப்பு உள்ளது. ‘ஐஸ்கிரீம்’, ‘சாட் வகைகள்’, பர்மா உணவுகளான ‘அத்தோ’ என சிற்றுண்டி வகைகளும் பெரிய பெரிய புகழ்பெற்ற உணவகங்களையும் தனக்குள்ளே சிங்காரத்தோப்பு வைத்துள்ளது.

வண்டியை பார்க் செய்துவிட்டு சுத்த ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரமாக யாரும் சிங்காரத்தோப்பை விட்டு வெளியே வரவே முடியாது. அவ்வளவு கடைகள்! அத்தனையும் தரத்தில் அசத்தலாகவும், விலையில் சாமானியர்களுக்கு ஏற்றதாகவும், எந்தப் பொருளை தேடுகிறீர்களோ அதை கண்டிப்பாக வாங்குகிற இடமாகவும் இருக்கிறது.

08ce36b7 8e92 4b1a 817a 2d42c2ae4f62 Tamil News Spot
திருச்சி

மொத்தத்தில் சிங்காரத்தோப்பு இல்லை என்றால் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் இடம் திருச்சியில் இல்லாமலே போயிருக்கும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த சிங்காரத்தோப்பை பற்றி அங்கு வந்திருந்த வாணிஸ்ரீ என்ற பெண்ணிடம் பேசினோம், “என்னோட ஊரு முசிறி, 10 ரூபா இருந்தா போதும் நல்ல அழகழகா கம்மல் வாங்கிடலாம், 100 ரூபாக்கு வேற லெவல்ல இருக்குற செருப்பு வாங்கிடலாம். இன்னும் சுடிதார் டாப்ஸ், செல்போன், செல்போனோட ஸ்பேர்பார்ட்ஸ்ன்னு நெறைய கிடைக்கும்.

Also Read: திருச்சி ஹேங்அவுட் – பட்ஜெட் டிரிப்: கொல்லிமலைப் பள்ளத்தாக்கில் புத்துணர்வு அளிக்கும் புளியஞ்சோலை!

குறிப்பா புடவைகளுக்கு ஏத்த இடம் இது. ஜார்ஜெட் புடவைகள், சுங்குடி புடவைகள், பெங்காலி, சூரத், உள்ளிட்ட பல ரக புடவைகள் கிடைக்கும். நாம ஒரு புடவைய வாங்க வந்தால் எத எடுக்குறது, எத வேணானாம்னு சொல்றது தெரியாது. அந்த அளவிற்கு பெண்களுக்கு ஏத்த இடம்.

30763daa aeaf 4424 b8e9 dd4d9581fd80 Tamil News Spot
புடவைகள் விற்பனை

அத்தோடு வீட்டுக்குத் தேவையான எல்லாத்தையுமே நான் இங்கதான் வாங்குறேன். நான் வாங்குறது இல்லாம என்னோட எல்லா பிரெண்ட்ஸ்கிட்டயும் சிங்காரத்தோப்புக்கு போய் வாங்குங்கன்னு சொல்லி அனுப்புவேன். நல்ல ஜாலியா ஊர் சுத்தணும்னு நினைச்சாக்கூட பிரண்ட்ஸ் கூட சேந்து இங்க வந்துடுவோம். செம என்டர்டெயின்மென்டா இருக்கும்” எனச் சொல்லி நமக்கும் எனர்ஜி லெவலை ஏற்றினார்.

விஷ்ணுவர்தன் என்பவரிடம் பேசினோம், “நான் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவன். அரசு போட்டித் தேர்வுக்கு பிரிபேர் பண்ணிட்டு இருக்கேன். என்னோட எல்லா தேவைக்கான புக்ஸயும் இங்க இருக்குற பழைய புக் கடையிலதான் வாங்குனேன். விலை கம்மியா இருக்கும்.

8468ee08 0103 46de 800e 1be14e96d27d Tamil News Spot
பாலக்கரை விஷ்ணுவர்தன்

அதே சமயம் எந்தக் குறையும் இல்லாம புக்ஸ் வாங்கிட்டு போனேன். முதல்முறை இங்க வந்து வாங்கிட்டு போனபோது தான் எனக்கு இங்க இவ்ளோ பொருள்கள், இவ்ளோ சீப்பா கிடைக்குதுன்னு தெரிஞ்சிது. அப்பறம் எல்லாத்தையும் வாங்க ஆரம்பிச்சேன். இப்போ, வாரவாரம் இங்க வந்துடுவேன்.

4bcd31f9 2438 4d13 812b c9c1314f31e3 Tamil News Spot
சிங்காரத்தோப்பில் கடைகள்

எனக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மேல ரொம்ப ஆர்வம், அதுனாலயே கேமரா, செல்போன் சம்பந்தப்பட்ட பொருட்கள், மத்தபடி மார்க்கெட்ல புதுசா லான்ச் ஆகுற விஷயங்கள்ன்னு தேடித் தேடி பார்ப்பேன். அதுக்காகவே சிங்காரத்தோப்பு வந்துடுவேன். இங்க கிடைக்காத, மார்க்கெட்டுக்கு வராத பொருள்கள்ன்னு எதுமே இல்லை. இன்னைக்கு இன்னும் எனக்கு தேவைப்படுற புக்ஸ் வாங்குறதுக்காகதான் வந்தேன்” எனச் சொல்லி முடித்தார்.

Also Read: திருச்சி – ஊறும் வரலாறு – 3: தமிழர்களின் பெருமிதம் சோழன் கரிகாலன்!

குடும்பத்தினருடன் வந்திருந்த சிவக்குமார் என்பவரிடம் பேசினோம், “சிங்காரத்தோப்பு தாங்க எங்க குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் ஜாலி பண்ற பிளேஸ். குழந்தைங்களுக்கு இங்க வந்தா பொம்மை கிடைக்கும்னா, குடும்பத்துல இருக்குற பெண்களுக்கு சேலையில இருந்து நகைல இருந்து மத்த எல்லாமுமே இங்க ரொம்ப சீப்பா, நல்ல குவாலிட்டியா கிடைக்கும். அதுனாலயே சிங்காரத்தோப்புன்னா எல்லாரும் உடனே கிளம்பிடுவாங்க. இது இப்போன்னு இல்லை எங்க அப்பா அம்மா காலத்துல இருந்து பாக்குறேன். அப்போதும் அப்படிதான்.

எப்போதும் கூட்டமா, ஜேஜே ன்னு இருக்குறத பாத்தாலே மனசு லேசாகி நம்மளையும் கொண்டாட்டமா மாத்திடும். திருச்சில இருக்க ஒன் ஆப் தி பெஸ்ட் பிளேஸ்ல கண்டிப்பா சிங்காரத்தோப்பு இருக்கும். இதுமட்டும் இல்லாம அருங்காட்சியகம், குகைனு நெறைய இருக்கனால பிள்ளைங்களுக்கு என்ஜாய் பண்ண பெஸ்ட் பிளேஸ் இந்த இடம்தான்” எனச் சொல்லி முடித்தார்.

6f7e4d54 1a1f 452e 9772 0ddac2cdf114 Tamil News Spot
சிங்காரத்தோப்பில் மக்கள்

திருச்சி மாநகர மக்களுக்கு மட்டும் இல்லை. மாவட்டத்தில் உள்ள கிராமம், நகரம் என எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கும் மிகச் சிறந்த இடம் இந்தச் சிங்காரத்தோப்புதான்!

ஆனால், என்னதான் அனைத்து பொருள்களும் கிடைக்க கூடிய புகழ்பெற்ற இடமாக இருந்தாலும் மக்கள் சிறிதளவேணும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியிருக்கலாம் என்றே நமக்கு தோன்றியது. நம் பாதுகாப்பு நம் கைகளில்தானே?!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *