Share on Social Media

பெண்கள் கல்வியறிவு பெற்று சமூக விழிப்புணர்வு பெற்றாலும், திருமணத்துக்குப் பிறகு வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டு, மனைவியாகவும் தாயாகவும் ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையில், தமிழ் மீது அதீத காதல் கொண்ட பெண் ஒருவர், திருமணத்துக்குப் பின்னான இல்லத்தரசி வாழ்விலும், தன் அன்றாட வேலையின் மூலம் அந்தத் தமிழையும், திருக்குறளையும் மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களாகத் தினம் ஒரு திருக்குறளை தன் வாசலில் கோலமாக எழுதி, தற்போது 1,330 குறளையும் முடித்துள்ளார் மதுரை வாடிப்பட்டி, திருவேடகம் பகுதியைச் சேர்ந்த மாலதி.

தமிழ் மீது தனக்குள்ள ஆர்வத்தையும், தனது சமூக அக்கறையையும் பற்றி நம்மிடம் பேசினார் மாலதி.

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே தமிழ்மொழி மேல ரொம்ப ஆர்வம். ஆசை ஆசையா படிப்பேன். இளநிலை வேதியியலை தமிழ் வழியிலதான் படிச்சேன். இளநிலை படிப்பு முடிஞ்சதும் எனக்குத் திருமணம் முடிஞ்சது. அதனால மேற்கொண்டு படிக்க முடியலை.

திருமணத்துக்கு அப்புறம் அன்றாட இல்லத்தரசி வேலைகள்ல வாழ்வு நகர்ந்தது. இருந்தாலும், நாம இருக்குற வட்டத்துக்குள்ள இருந்துட்டே நமக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை, மத்தவங்களுக்கும் பயன் தரும் விதமா செய்யணும்னு நினைச்சேன். அப்போதான் திருக்குறள் கோலம் ஐடியா தோணுச்சு.

எனக்குக் கோலம் போடுறது ரொம்பப் பிடிக்கும். ஏழு வருஷத்துக்கு முன்னால, கோலம் மூலமா வாழ்த்துகள் எழுதத் தொடங்கினேன்.

திருக்குறள்

திருக்குறள்

நாலு வருஷத்துக்கு முன்னாடி, தினம் ஒரு திருக்குறள் கோலம் போட முடிவு செஞ்சேன். மனைவி, அம்மா பொறுப்புகள் என் கடமை. அதைத் தாண்டி, நான் தெரிஞ்சுக்கிட்ட நாலு நல்ல விஷயங்களை மத்தவங்களுக்கும் சொல்லணும்னு நினைச்சேன். தினமும் எங்க வீட்டு வாசல்ல தமிழ் மணம் கமழ ஆரம்பிச்சது. உள்ளூர் மக்கள் ரொம்ப பாராட்டினாங்க. வெளியூர்ல இருந்து யாராச்சும் வந்தா, எங்க வீட்டு வாசல்ல வியந்து நின்னு, கோலத்தைப் பார்த்துட்டு, குறளைப் படிச்சிட்டு, அதுக்கு பொருள் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, போட்டோ எடுத்துட்டுப் போவாங்க.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *