Share on Social Media


பின்னணி என்ன?

திரிபுரா பா.ஜ.க அரசில் 2018 முதல் 2019 வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் சுதீப் ராய் பர்மான். `பர்மான் கட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார்’ எனச் சொல்லி, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் பிப்லப் குமார். இதனால் அதிருப்தியிலிருந்து வந்தார் சுதீப் ராய் பர்மான். சுதீப் ராய் பர்மான் பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பாக காங்கிரஸிலும், திரிணாமுல் காங்கிரஸிலும் இயங்கி வந்தவர். 2013 திரிபுரா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற இவர், பின்னர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இவரோடு சேர்ந்து ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திரிணாமுல் காங்கிரஸுக்குத் தாவினர். 2017-ல் ஐந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்துக் கொண்டு, பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார் இவர்.

44 மாதங்களாக பா.ஜ.க-வில் இருந்துவிட்டு தற்போது மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்திருக்கும் முகுல் ராய்க்கு நெருக்கமானவர் சுதீப் ராய் பர்மான். இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் சந்திப்புக்குப் பின்னர்தான், சுதீப் ராய் பர்மான், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஒன்பது பேரை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றதாகத் தெரிகிறது.

முகுல் ராய், சுதீப் ராய் பர்மான்

முகுல் ராய், சுதீப் ராய் பர்மான்

இந்தச் சம்பவத்தால் திரிபுரா பா.ஜ.க-வில் கலகம் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கலகத்தை சரிக்கட்ட, தேசியத் தலைமை சில முக்கிய பா.ஜ.க தலைவர்களைத் திரிபுராவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. பா.ஜ.க-வின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், வடகிழக்கு மாநிலங்களின் அமைப்புச் செயலாளர் அஜய் ஜம்வால், திரிபுரா பா.ஜ.க-வின் பொறுப்பாளர் பனிந்த்ரநாத் ஷர்மா ஆகியோர் இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உட்கட்சி விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு, “கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை” என்பதைத்தான் திரிபுரா பா.ஜ.க-வினர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாகப் பேசிய திரிபுரா பா.ஜ.க தலைவர் மாணிக் சாஹா, “எந்த எம்.எல்.ஏ-வும் கட்சியின்மீது கோபமாக இல்லை. கட்சியைப் பலப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆலோசனைக் கூட்டங்கள். குடும்பம் என்றிருந்தால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதுபோலத்தான் கட்சியிலும். பிரச்னைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்படும். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் எங்களோடுதான் இருக்கின்றனர்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *