Share on Social Media


கோல்கட்டா:ராஜ்யசபா இடைத்தேர்தலில், மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள ஒரு இடத்திற்கு, திரிணமுல் காங்., வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த திரிணமுல் காங்.,கை சேர்ந்த மனஸ் புனியா, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதைஅடுத்து தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை அவர் ராஜினாமா செய்தார்.இதனால் காலியாக அறிவிக்கப்பட்ட அந்த இடத்திற்கும், வேறு ஆறு ராஜ்யசபா இடங்களுக்கும், அடுத்த மாதம் 4ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் காலியான இடத்திற்கு, திரிணமுல் காங்., வேட்பாளராக சுஷ்மிதா தேவ் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., தேசிய செய்தி தொடர்பாளராகவும், மகளிர் அணி தலைவராகவும் பதவி வகித்து வந்த சுஷ்மிதா, கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி, திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *