Share on Social Media


1946-ல் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ஆவதற்கு தங்கதூரி பிரகாசத்திற்கு ஒரு எம்.எல்.ஏ-வினுடைய வாக்கு தேவைப்படுகிறது. அவர் ஈரோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான தியாகி ஈஸ்வரனை அணுகி ஆதரவு கேட்கிறார். `ஈரோடு மாவட்டத்தில் நீங்கள் கீழ்பவானி அணையைக் கட்டிக் கொடுப்பதாகச் சொன்னால் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன்!’ எனச் சொல்லி ஆதரவளிக்கிறார் ஈஸ்வரன்.

தங்கதூரி பிரகாசம் முதலமைச்சரானதும் கீழ்பவானி அணை கட்டப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. இதில் கொதித்துப் போன தியாகி ஈஸ்வரன் `எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள்’ என தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுகிறார். ஈஸ்வரனின் கோபத்தையும், அதன்பின்னுள்ள சமூக அக்கறையையும் உணர்ந்த முதலமைச்சர் தங்கதூரி பிரகாசம் அதன்பிறகு கீழ்பவானி அணை கட்டும் திட்டத்தைக் கையிலெடுக்கிறார். அந்த கீழ்பவானி அணைதான் இன்றைக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணை; தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய அணை.

கீழ்பவானி அணை

கீழ்பவானி அணை

இந்த பவானிசாகர் அணையிலிருந்து வெட்டப்பட்டுள்ள கீழ்பவானி வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2.07 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. வானம் பார்த்த பூமியாகவும், வறட்சியின் பிடியில் காய்ந்து போயிருந்த நிலமெல்லாம் இன்றைக்கு பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மாறியிருக்கிதென்றால் அதற்கு தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் தான் முழு முதற்காரணம். ஒரு சட்டமன்ற உறுப்பினராக எவ்வளவு செய்ய முடியும்?… எப்படியான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்?… என்பதற்கு ஈஸ்வரனின் செயல்பாடு ஒரு பெரும் சான்று.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *