Share on Social Media


பொதுக்கூட்ட மேடையில், செருப்பை உயர்த்திப்பிடித்து தி.மு.க-வை சீமான் எச்சரித்த விவகாரம்தான் இணைய உலகில் ட்ரெண்டிங்!

‘கருப்பு சிவப்பு’ நிற செருப்பைக் கையில் தூக்கிப் பிடித்தபடி ஆவேச அனல் பறக்க சீமான் பேசும் வீடியோக் காட்சிகளும், பதிலடியாக தி.மு.க-வினர் ட்ரெண்டிங் செய்துவரும் ஹேஸ்டேக்கும் இணையத்தையே கிடுகிடுக்க வைக்கிறது.

தமிழக அரசியல் சூழலில், தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, ‘திராவிடக் கட்சி’களை எதிர்த்து அரசியல் செய்துவருகிறது. குறிப்பாக தி.மு.க-வைக் குறிவைத்து நேருக்குநேர் மோதிவருகிறது நாம் தமிழர் கட்சி. கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டது.

பிரபாகரன் – கருணாநிதி

போரில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையோடு சர்வதேச நாடுகளும் கைகோத்துக்கொண்டு செயல்பட்டதும், இந்தப் போரின் பின்னணியில் இந்தியா சிங்கள ராணுவத்துக்கு அளப்பரிய உதவிகளைச் செய்துவந்ததுமே புலிகளின் தோல்விக்கு முக்கியக் காரணமெனச் சொல்லப்படுகிறது.

இறுதிப்போர் முடிவு தமிழகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த அந்தச் சூழலில், ஆட்சிப்பொறுப்பில் இருந்துவந்த தி.மு.க பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது என அப்போதே அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த காங்கிரஸ் கட்சியினரோடு கூட்டணியாகக் கை கோத்திருந்த தி.மு.க., இறுதிப்போரைத் தடுத்து நிறுத்தி, ஈழ மக்களையும் புலிகள் அமைப்பையும் காப்பாற்றத் தவறிவிட்டது என்றக் குற்றச்சாட்டும் அழுத்தமாகவே முன்வைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாக மேடைதோறும் முழங்கிவந்த சீமான், தேசியத் தலைவர் பிரபாகரனைத் தலைவராக ஏற்று, ‘நாம் தமிழர்’ எனும் பெயரில் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இதன் அடுத்தகட்டமாக நாம் தமிழர் கட்சிக் கூட்டங்கள்தோறும், ‘இறுதிப்போரில், காங்கிரஸ் – தி.மு.க செய்த துரோகங்கள்’ என்று பட்டியலிட்டு முழங்க ஆரம்பித்தார். தமிழக அரசியல் சூழலில், இது தி.மு.க-வுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி என அரசியல் சூழல்கள் மாறிவந்தபோதிலும் நாம் தமிழர் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமும் விலகாமல், தொடர்ந்து தி.மு.க எதிர்ப்பை பதிவு செய்தே வருகிறது. மத்திய பா.ஜ.க-வோடு அ.தி.மு.க கூட்டணி அமைத்துக்கொண்ட பிறகு, தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பை வலுவாக முன்னெடுத்து தன் அரசியல் பயணத்தைத் தொடர்கிறது தி.மு.க.

seeman stalin Tamil News Spot
சீமான் – மு.க.ஸ்டாலின்

இந்தச் சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் தி.மு.க ஆதரவாளர்கள், ”கழகங்கள் இல்லாத் தமிழகம் என்ற பா.ஜ.க-வின் கொள்கையையே நாம் தமிழர் கட்சியும் முன்னெடுத்து வருவது, அந்தக் கட்சி பா.ஜ.க-வின் பி டீம் என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது. அந்தவகையில், பா.ஜ.க மட்டுமல்ல நா.த.க-வினரும் சங்கிகள்தான்” என்கின்றனர் எள்ளலாக. மேலும் இதற்கு ஆதாரமாக நாம் தமிழர் கட்சியினரது அரசியல் செயல்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், தி.மு.க-வினரின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நாம் தமிழர் கட்சியோ, ”நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால், தமிழக அரசியலுக்குள் பா.ஜ.க வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியே, எங்கள் கட்சிக்கு சிறுபான்மையினரது வாக்குகள் கிடைக்காவண்ணம் பொய்ப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள் தி.மு.க-வினர்.

Also Read: “அண்ணாமலையைக் கைதுசெய்ய தைரியமிருக்கிறதா?!” – திமுக-வுக்குச் சவால்விட்ட சி.வி.சண்முகம்

இப்போது ஆட்சிக்கு வந்துவிட்ட பிறகும்கூட, மம்தா பானர்ஜி போல் மத்திய பா.ஜ.க அரசை எதிர்க்கத் துணியாமல், பம்மி பதுங்கி ஆட்சியைக் காப்பாற்றி வருகிறார்கள். இந்த உண்மை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு, நாம் தமிழர் கட்சி மீது ‘பா.ஜ.க பி டீம்’ என்ற பட்டப்பெயரை தொடர்ச்சியாக சூட்டி வருகின்றனர்” என கொதிக்கின்றனர்.

தொடர்கதையாகிப்போன இந்த முட்டல் மோதல் அரசியலால் கொதித்துப்போன சீமான், அண்மையில் கட்சிக் கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, தான் அணிந்திருந்த கருப்பு சிவப்பு நிற செருப்பைத் திடீரென கழற்றி, அதை ஒரு கையில் தூக்கிப்பிடித்தவாறு தி.மு.க-வினரை மிகக் கடுமையாக எச்சரித்தார்.

prabhakaran 1 Tamil News Spot
பிரபாகரன்

சீமானின் இந்த செயல், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திவருகிறது. ‘அரசியல் நாகரிமற்ற பேச்சு இது’ என்று ஒரு தரப்பு கண்டிக்க, நாம் தமிழர் கட்சியின் தம்பிமார்களோ, சீமானின் செயல்பாட்டை வரவேற்றை சமூக ஊடகம் வழியே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தி.மு.க ஆதரவாளர்களும் சில ஹேஸ்டேக்கோடு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், ‘அரசியல் மேடையில், இதுபோன்று அநாகரிகமாக தி.மு.க-வை விமர்சித்தது ஏன்…’ என்றக் கேள்வியை நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடமே கேட்டபோது,

Also Read: `இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்!’ – அதிமுகவை எச்சரிக்கும் செந்தில் பாலாஜி

”தி.மு.க அரசை எதிர்க்கவேண்டும் என்று எனக்கு எந்தக் கொள்கை, கோட்பாடும் கிடையாது. தனிப்பட்ட முறையில் நானே தி.மு.க-காரன்தான். ஆனால், ஈழப் போருக்குப் பிறகு, என்னுடைய நிலைப்பாடு என்பது வேறு. அதாவது, தி.மு.க-வை எதிர்ப்பது என்பது அல்ல… ஒழிக்கணுங்கிற வன்மம் எனக்குள் இருக்கிறது. ஏனெனில், நீங்கள் என் அண்ணன் பிரபாகரனை வீழ்த்திவிட்டீர்கள்... எனவே உங்களை வீழ்த்த வேண்டும் என்ற கடமை அவரின் பிள்ளைகளான எங்களுக்கு இருக்கிறது. அதைப் பேசிப் பயனில்லை.

உலகத்துக்கே தெரியும் ஜக்கிவாசுதேவ், வனத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று. ஆனால், அப்படி எந்த ஆக்கிரமிப்பும் நடக்கவில்லை என்கிறது தி.மு.க அரசு. அப்படியென்றால், உண்மையான சங்கி யார்?

seeman 2 Tamil News Spot
சீமான்

லயோலா மற்றும் புதுக்கல்லூரியில் அனைத்து மதத்தினரும் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். ‘இந்து அறநிலையத்துறை சார்பாக கட்டப்படும் கல்லூரியில், இந்துக்களை தவிர வேறு யாரும் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவேண்டாம்’ என்று தமிழக அரசே விளம்பரம் கொடுக்கிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டைத்தானே பா.ஜ.க பின்பற்றிவருகிறது. அதையே தி.மு.க-வும் பின்பற்றினால் நீங்கள் யார்?

இந்த உண்மையை மறைத்துவிட்டு திரும்பத் திரும்ப எங்களைப் பார்த்து, ‘சங்கி, சங்கி’ என்று தி.மு.க சொல்லிவந்தால், எங்களுக்கு கோபம் வருமா, வராதா? எனவேதான் தி.மு.க-வை எச்சரித்தேன். அரசியலில் ரொம்பவம் பக்குவப்பட்டுப்போனதால், எச்சரித்ததோடு நிறுத்திவிட்டேன்” என்கிறார் விளக்கமாக.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.