Share on Social Media


அணைப் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பும், அதற்கான காரணமும்!

“ஒரு மாநிலத்தால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு, மற்றொரு மாநிலத்திலிருக்கும் அணைகள் மீதான உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இந்த மசோதா மூலம் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுவிடும் என்பதால் தமிழகத்தால் நிர்வகிக்கப்பட்டுக் கேரளாவில் நிறுவப்பட்டிருக்கும் முல்லைப்பெரியாறு, பெருவாரிப்பள்ளம், பரம்பிக்குளம் போன்ற அணைகளின் மீதான நிர்வாக உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்படும் அபாயமிருக்கிறது. அணைகளின் மீதான மாநிலங்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்குரிய எந்த வழிவகைகளும் இந்தச் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. ஏற்கெனவே, அண்டை மாநிலங்களால் தமிழகத்துக்குரிய நதிநீர் உரிமைகள் மறுக்கப்படும் சூழலில், புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதா தமிழகத்துக்கு இருக்கும் நதி நீர் உரிமையில் மிகப்பெரிய தாக்குதலாக இருக்கும். இரு மாநிலத்துக்கு இடையேயான நெடுநாள் ஒப்பந்தங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதன்மூலம் அண்டை மாநிலங்களுடனான தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும். ஏற்கெனவே, சத்தீஸ்கர் மாநிலத்திலிருக்கும் ஷினோத் எனும் ஆற்றைத் தனியாருக்குக் கொடுத்தது போல எதிர்காலத்தில் நீர்வளத்தைத் தனியார் வசமாக்க இந்த மசோதா வழிவகுக்குமோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுகிறது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

அணைகள் பாதுகாப்பு – இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் மாநிலப் பட்டியல் பிரிவு 17-ல் உள்ளது. இந்த மசோதா மூலம் அணைகளைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு முயல்கிறது. அப்படி நடக்குமானால், இது இந்திய அரசியலமைப்பை மீறும் செயல். மேலும், வழக்கம்போல மாநிலங்களிடமிருந்து எந்த வித ஒப்புதலையும் பெறாமல் மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *