Share on Social Media


மேலும், ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், நீட் தேர்வை ரத்து செய்வோம், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் 5,000 நிவாரணம் வழங்குவோம் என்று `ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தான் தரப்போறாரு!’ எனப் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தனர்.‌ ஆனால் விடியல் அரசு என்று ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு ஒரு விடியா அரசாக திகழ்கிறது. ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தும், அதனை குறைக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.‌

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தகுந்த சீருடைகள் வழங்காமல் உள்ளது. அரசு ஊழியர்கள் எங்கள் நண்பன் எனச் சொல்லி வாக்கு வாங்கிய தி.மு.க, அரசு தற்போது அவர்களை ஏமாற்றி வருகிறது. எனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா அரசான தி.மு.க-வை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து விரைவில் போராடுவார்கள். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.