Share on Social Media


திருத்தணி-கொரோனா தொற்றால் முழு ஊரடங்கையொட்டி தினமும், 2,000 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் நாசர், நேற்று துவக்கி வைத்தார்.திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், கொரோனா காலத்தில் ஊரடங்கு முடியும் வரை, ‘தளபதி இலவச உணவகம்’ வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருத்தணியில் நடந்தது.இதில், பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று, தினமும், 2,000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இதுதவிர மினி வேன் மூலம், திருத்தணி நகரம் முழுதும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதையும் கொடியசைத்து, அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.நேற்று முதல் நாளில், ஏழைகளுக்கு பிரிஞ்சி சாதம், தயிர் சாதம், மூக்கடலை சுண்டல், முட்டை மற்றும் ஒரு ஆப்பிள் ஆகியவை வழங்கப்பட்டது.ஊரடங்கு முடியும் வரை தினமும், 2,000 பேருக்கு, மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, தன் செலவில் உணவு வழங்குவதாக அமைச்சரிடம் தெரிவித்தார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *