பல வரலாற்று நினைவுகளை கொண்டு உள்ள திண்டுக்கல் மலைக்கோட்டைதொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நீர் சுனைகள், கோட்டையை சுற்றி கோட்டை குளம், அய்யன் குளம் என அகழிகள் உள்ளது. விஜய நகர பேரரசின் சிற்ப கலையை உணர்த்தும் சிற்பங்கள், துாண்கள், கோயிலையும் பார்க்க முடியும்.
பாதாள சிறைகள், மலை மீது இருந்து நகரை கண்காணிக்க கோட்டையை சுற்றி கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன. விடுமுறை தினம், பண்டிகை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இங்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. பயணிகள் மலையேற கைப்பிடி வசதிகள் இல்லை. அதனால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. குழந்தைகளுடன் வரும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மின் விளக்குகள் இருந்தும் பயனில்லை. மலைக்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். இங்கு 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. பெரியவர்களுக்கு ரூ.25, வெளிநாட்டினருக்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது. பயணிகள் வருகையை அதிகரிக்க குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Advertisement