Share on Social Media


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் ஏதோ நடந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். சசிகலா என்பவர், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியல்ல. அது தவிர்க்கப்பட வேண்டிய சக்தி. சிறைக்கு சென்று திரும்பிவிட்டு, அ.தி.மு.க., நன்றாக இருப்பதைப் பார்த்து மீண்டும் கைப்பற்றிவிட நினைக்கிறார். அதனால், பல குறுக்கு வழிகளைக் கையாளப் பார்க்கிறார். அ.தி.மு.கவிலுள்ள ஒரு கோடி தொண்டர்களில் ஒருவரிடம் மட்டும் பேசிவிட்டு இந்த இயக்க்கத்தை கைப்பற்ற நினைப்பது நகைப்புக்குரியது. அவரால் ஒரு சதவீதம்கூட கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது” எனப் பேசினார். இதில், சசிகலாவை, பேய் என்றும், வேஸ்ட் லக்கேஜ் எனவும் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.

உருவ பொம்மை எரிப்பு

உருவ பொம்மை எரிப்பு

நத்தம் விஸ்வநாதனின் இந்தப் பேச்சு, அ.ம.மு.கவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நத்தம் பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக திண்டுக்கல் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராஜா, நகர செயலாளர் சிவக்குமார் தலைமையில் தொண்டர்கள் நத்தம் விசுவநாதனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நத்தம் விஸ்வநாதனின் உருவபொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில், ஈடுபட்டிருந்த நத்தம் காவல்துறையினர் உருவ பொம்மையை கைப்பற்றி தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *