Tamil News No20 29 280193507671357 Tamil News Spot
Share on Social Media

சென்னை: திண்டுக்கல் வரதமாநதி அணை, கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.6 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம்போக பாசனத்திற்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆனைமலை வட்டார ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு 6.11.2020 முதல் 15.4.2021 முடிய 160 நாட்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து 1137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து,  பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக  6.11.2020 முதல் 120 நாட்களுக்கு பழனி வட்டம், பாப்பன்கால்வாய், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 பாசன குளங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *