Share on Social Media

சென்னை: திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திண்டுக்கல் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடரின் ஐந்தாவது சீசன் நடத்தப்படுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடக்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின.‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் அணி, பீல்டிங் தேர்வு செய்தது.

திருச்சி அணிக்கு சாத்விக், சுமந்த் ஜோடி துவக்கம் கொடுத்தது.திண்டுக்கல் ‘வேகம்’ ரங்கராஜ் சுதீஷ் மிரட்டல் பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தனது முதல் 2 ஓவரில் 3 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சாத்விக் (12), சுமந்த் (22) சீரான இடைவெளியில் அவுட்டாகினர். அடுத்து இணைந்த நிதிஷ், முகமது ஜோடி சற்று வேகமாக ரன் சேர்த்தது. நிதிஷ் (45), முகமது (26) கைகொடுக்க, திருச்சி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு அருண், கேப்டன் ஹரி நிஷாந்த் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது அருண் (19), ஹரி நிஷாந்த் (38), சுரேஷ் (9) அவுட்டாகினர். மணிபாரதி (9), ராஜேந்திரன் (6) அவுட்டான போதும், மோகித் வெற்றிக்கு கைகொடுத்தார். திண்டுக்கல் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோகித் (41), சுவாமிநாதன் (11) அவுட்டாமல் இருந்தனர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *