Share on Social Media


தாக்குதலுக்கு உள்ளானதாக ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிங்ஸ்லி கழுத்து வயிற்றுப் பகுதியில் காயம் பலமாக இருப்பதாகத் தெரிகிறது. சிறுநீரக பிரச்னையும் ஏற்பட்டிருப்பதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மேல் சிகிச்சைக்காக குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமியிடம் கேட்டதற்கு, “சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் மூன்று காவலர்கள் நந்தன்குளத்துக்கு 21-5-2021 அன்று வழக்கமான ரோந்துப் பணிக்குச் சென்றபோது இருட்டுக்குள் கூட்டமாக இருந்த சிலரை அழைத்துள்ளனர். அப்போது சிலர் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் நான்கு இளைஞர்கள் மட்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எங்க ஊருக்குள் எப்படி வரலாம் எனக் கேட்டு போலீஸாரைத் தாக்கியிருக்கிறார்கள். அப்போது கிராமத்தினர் அங்கு சூழ்ந்துவிட்டதால் நான் போலீஸாருடன் சென்று ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வந்தேன். போலீஸாரை தாக்கியதால் பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பதால் பயந்து போய், போலீஸார் மீது வீண்பழி போடுகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரிந்த நான்கு பேர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *