Share on Social Media

இந்தத் தமிழ் மரபுத் திருமணத்துக்கு முன்னின்ற தமிழ் தேசக் குடியரசு இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் தமிழரசனிடம் பேசினோம். “இந்தத் தமிழ் மரபுத் திருமணம் தமிழ்நாட்டுல வேற எங்கயும் நடந்த மாதிரி தெரியலை. ஒரு புது முயற்சியாக இதை முன்னெடுத்திருக்கோம். எந்த வழக்கமான சடங்குகளையும் செய்யாம, மணமக்களோட குடும்ப உறுப்பினர்கள் மாலையும், தமிழ்த் தாலியும் எடுத்துக் கொடுக்க சிம்பிளா திருமணம் நடந்தது.

தமிழ் தாலி

தமிழ் தாலி

தாலி அணிவிக்கிறதுக்கு முன்னாடி மணமக்கள் ரெண்டு பேரும், `வள்ளுவர் நமக்கு வழங்கிய அறநெறியின் வழியாகவும்; அம்பேத்கர், பெரியார் போன்றோரை வழிகாட்டியாகக் கொண்டு தன் குடும்பம் – தன் வீடு – தன் சொத்து என்றில்லாமல்… நம் இனம் – நம் மொழி – நம் நாடு என்பதற்காக இறுதிவரை போராடுவோம். குரல் கொடுப்போம். ஆண், பெண் என்பது உயிரில் எந்த வேற்றுமையும் இல்லை என்பதால் எந்த பாரபட்சமும் இல்லாமல் குடும்பம் நடத்துவோம்’ என உறுதிமொழி எடுத்துக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.

அதேமாதிரி அட்சதை என்ற பெயரில் நாம் உண்ணும் அரிசியை வீணாக்கக் கூடாது என நினைத்தோம். அதற்குப் பதிலாக `மணமக்கள் வாழ்க’ என மூன்று முறை சொல்லச் சொல்லி பூக்களைத் தூவி, கைதட்டி வாழ்த்தச் சொன்னோம். தமிழ் மரபுகளையும், தமிழ்க் கலைகளையும் மக்களிடம் சேர்த்து வரும் எங்களுக்கே, இந்தத் திருமணம் வித்தியாசமாக இருந்தது” என்றார்.

தமிழைப் போலவே உங்கள் வாழ்வும் செழித்துத் தழைக்க வாழ்த்துகள்!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *