Share on Social Media


இந்தியப் பொருளாதாரம் அதன் மோசமான காலகட்டத்தில் நுழைந்த இதே வேளையில்தான், ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு இந்தியாவில் அரசியல் ஸ்திரமின்மையையும் தொடங்கிவைத்தது. 414 இடங்களோடு அதுவரை யாரும் பெற்றிராத அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த ராஜீவ், 1989 தேர்தலில் வெறும் 197 இடங்கள் மட்டுமே பெற்று ஆட்சியை இழந்தார். இந்திய அரசியலில் காட்சிகள் மாறத் தொடங்கின. பா.ஜ.க., வெளியிலிருந்து ஆதரவளித்த நிலையில், வி.பி.சிங் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் முன்பாகவே வி.பி.சிங் பதவி விலக நேர்ந்தது.

அரசியல் கொதிநிலையும், பொருளாதார மந்தநிலையும் இணைந்த இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்க, பிரதமர் பொறுப்புக்கு வந்தார் சந்திரசேகர். நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா பொறுப்பேற்க, பொருளாதாரத்தைச் சீரமைக்கும் பொருட்டு ஐ.எம்.எஃப் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது இந்திய அரசு. ஆனால், மூடி’ஸ், எஸ் & பி போன்ற சர்வதேசப் பொருளாதாரத் தரச்சான்று நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார நிலையைக் குறைத்து மதிப்பிட, அது நடக்காமல் போனது. சந்திரசேகர் அரசாங்கம் ராஜீவ் காந்தியை உளவு பார்க்கிறது என்ற குற்றச்சாட்டில் காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற, 223 நாட்களில் இந்த ஆட்சி முடிவுக்கு வந்தது.

சோவியத் யூனியன் சிதறியது

சோவியத் யூனியன் சிதறியது

சோவியத் யூனியன் சிதறியது. இது இந்திய – சோவியத் இருதரப்பு வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. வளைகுடாப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் வரவு-செலவு சமநிலை குலைந்தது. அந்நியச் செலாவணி இருப்பு கிட்டத்தட்ட காலியாகிப் போனது. அந்த இருப்பைக் கொண்டு அத்தியாவசிய இறக்குமதியை அடுத்த 2 வாரங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை. நாடு திவாலாகும் சூழலுக்குச் சென்றது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *