Share on Social Media


கோவை:கொரோனா அச்சம் நீங்கியுள்ளதால், கோவை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜவுளி, நகைக்கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் தீபாவளி விற்பனை சூடு பிடித்துள்ளது.தீபாவளி பண்டிகைக்கு, இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் போனஸ் அறிவிக்கப்பட்டு விட்டது.
தனியார் நிறுவனங்களில் போனஸ் வினியோகம் நடந்து வருகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான வர்த்தகர்களும் பொருட்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளன. இதனால், கோவை கடைவீதிகளில் பொருட்கள் வாங்க வரும் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட வணிக பகுதிகளில் வாகன போக்குவரத்தும், மக்கள் கூட்ட நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோர கடைகள், மார்க்கெட்டுகள் என அனைத்து இடங்களிலும், மக்கள் கூட்டம் அதிகரித்திருந்தது.
ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக, கொரோனா தொற்று பாதிப்பால் வியாபாரத்தை இழந்து நொடிந்து போயிருந்த வர்த்தகர்கள், சில வாரங்களாக அதிகரிக்கும் வியாபாரத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!கொரோனா தொற்று இரண்டாம் அலையால், அதிகம் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.
பொதுமக்களும் தாங்களாகவே முன் வந்து, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதன் பயனாக, மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்துள்ளது.அதற்கு தகுந்தபடி சில வாரங்களாகவே தொற்று பாதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அச்சம் நீங்கிய மக்கள், தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைகளுக்கு படையெடுத்துள்ளனர்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *