Share on Social Media


ஆடைக்கும் தாம்பத்திய உறவுக்கும் அப்படியொரு நெருக்கமிருக்கிறது. இதைப் படித்தவுடனே, `புருஷன் வேலை செஞ்சு அலுத்து, களைச்சு வீட்டுக்கு வர்றப்போ அழுக்கு நைட்டியோட நிக்காம, அழகா புடவை கட்டிட்டு நிக்கணும்னு மனைவிக்கு டிப்ஸ் கொடுக்கப்போறீங்களா? நாங்களும் வேலைக்குப் போறோம். எங்களுக்கும் களைப்பு வரும். இதுல வீட்லேயும் அழகா டிரெஸ் பண்ணிட்டு இருக்க முடியாது’ என்று உங்களில் பலருக்கும் தோன்றலாம். ஆனால், இந்தக் கட்டுரை மனைவி கண்ணுக்குக் கணவனும், கணவன் கண்ணுக்கு மனைவியும் அழகாகத் தெரிவதன் மூலம் அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதைப் பற்றித்தான் பேசவிருக்கிறது.

Couple (Representational Image)

Also Read: விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F’ முறையில் இருக்கு தீர்வு! – காமத்துக்கு மரியாதை – 12

நாவல்களில் நாயகன், நாயகியை அறிமுகப்படுத்தும்போது அவர்களுடைய ஆடைபற்றிய வர்ணனைகள் அதிகமிருக்கும், கவனித்திருக்கிறீர்களா? அதேபோல, திரைப்படங்களிலும் நாயகன், நாயகியை அறிமுகப்படுத்துகையில் அவர்களுடைய ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். `சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு’, `சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே’ என்று நாயகி கொண்டாடப்படுவாள். நாயகமென்றால், `மல்லுவேட்டி மடிச்சுக் கட்டும் மச்சான் ஒரு மயிலக்காளை’ என்றோ, `சட்டைப் பட்டனை கழட்டிவிட்டா சரக்கு போதை சாமி’ என்றோ காலத்துக்குத் தகுந்த மாதிரி கொண்டாடப்படுவான். `முதல்வன்’ படத்தில் `உப்புக்கருவாடு, ஊற வெச்ச சோறு’ பாட்டில் ஆடைகளை மாற்றிக்கட்டிக்கொண்டு ஆடுவதும் ‘ஹா… இது நல்லாருக்கே’ என்கிற உணர்வைப் பலருக்கும் ஏற்படுத்தியது.

வண்ண வண்ண ஆடைகளுக்குத் தாம்பத்திய உணர்வைத் தூண்டுவதில் மிக முக்கியப் பங்கு இருக்கிறது. அது பட்டுப்புடவையாகவோ, கோட் சூட்டாகவோ இருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது நைட் பேன்ட்டாகவும் இருக்கலாம்; பெர்முடாஸாகவும் இருக்கலாம். சாட்டின் நைட்டியாகவும் இருக்கலாம்; வெற்று மார்பின் மேல் போர்த்தப்பட்ட காட்டன் டவலாகவும் இருக்கலாம்.

womanizer toys 1e3 lYkJsfs unsplash Tamil News Spot
Couple

தம்பதியரிடையேயான காமம் திடீரென, யதார்த்தமாகத்தான் நிகழும். இன்றைக்கு உறவுகொண்டே ஆக வேண்டுமென்று திட்டமிட்டெல்லாம் அது நிகழாது. கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களைத் தவிர்த்து. அப்படி யதார்த்தமாக நடக்கிற தாம்பத்திய உறவை, கொஞ்சம் அடிக்கடி என்றும், கூடுதம் ரொமான்ஸுடனும் நிகழ்த்த ஆடைகள் உதவும். வெண்ணிற ஆடைகள், பேபி பிங்க் மற்றும் பேபி ப்ளூ போன்ற கண்களை உறுத்தாத மெல்லிய காட்டன் ஆடைகள் துணையின் கண்களை `வாவ்’ சொல்ல வைக்கும். அது புடவையாக இருந்தாலும் ஓகேதான். ஷார்ட் டாப்பாக இருந்தாலும் ஓகேதான். பெண்கள் என்றாலே மென்மை என்கிற எண்ணம் ஆண்களுக்கு இருப்பதால், இரவுகளில் நைட்டி, டாப் என்று ஏதோ ஓர் உடையை மெத்தென்ற சாட்டின் துணியில் அணிந்துகொள்ளலாம். இறுக்கமான ஆடைகள்தான் செக்ஸி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இரவு நேரங்களில் லூஸ் ஃபிட்டிங் ஆடைகள்தான் செக்ஸியாக இருக்கும் என்கிறார்கள் காஸ்ட்யூம் டிசைனர்ஸ். இறுதியாக உள்ளாடைகள். வழக்கமான கறுப்பு, வெள்ளை, சந்தன நிறங்களைத் தவிர்த்துவிட்டு அடர் சிவப்பு, பர்பிள், வயலட் என பல வண்ணங்களில், லேஸ் வேலைப்பாடுகள் செய்தவையாகத் தேர்ந்தெடுத்து அணியுங்கள். இவையெல்லாம் பெண்களுக்கு…

அடுத்து ஆண்களுக்கு… நீங்கள் கணவனாகவே இருப்பது மட்டுமே தாம்பத்திய உறவுக்குப் போதாது. சிகரெட் பிடித்த வாயோடு, பாக்கு வாசனையோடு, வியர்வைக் கசகசப்புடன் தாம்பத்திய உறவை மேற்கொள்ளாதீர்கள். மனைவி சுத்தமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதைப் போலவே நீங்களும் இரவில் குளித்து, பல் தேய்த்துவிட்டு படுக்கையறைக்குச் செல்வது உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு நல்லது.

vikatan 2021 08 96af7ca0 848d 4ec8 87ab 801d06102e8d WhatsApp Image 2021 08 13 at 5 54 38 PM Tamil News Spot
டாக்டர் அசோகன்

ஆடைகளைப் பொறுத்தவரை லைட் கலர்ஸ் ஓகே. செக்ஸில் விதவிதமான பொசிஷன்ஸ், ஃபேன்டஸி போன்றவைதான் தாம்பத்திய உறவில் சலிப்பு ஏற்படுத்தாமல் காக்கும். இந்த வரிசையில் ஆடைகளுக்கும் ஒரு முக்கிய இடமிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

வாசகர் கேள்வி: “என்னுடைய ஆணுறுப்பு நீளமாக உள்ளது. ஆனால், பருமன் இல்லை. இதனால், என் துணையைத் திருப்திப்படுத்த முடியாதோ என்று அச்சமாக இருக்கிறது.”

மனநல மருத்துவர் அசோகன் பதில்: “நீளம் குறைவாக இருந்தாலும் சரி, பருமன் குறைவாக இருந்தாலும் சரி, விறைப்புத்தன்மை இருந்தால் போதும். துணையைத் திருப்திப்படுத்த முடியாதோ என்கிற அச்சம் தேவையில்லாதது.”

vikatan 2019 08 af6b4090 1643 4ad3 897e cfc3f84b9b12 WhatsApp Image 2019 08 14 at 5 54 10 PM Tamil News Spot
காமத்துக்கு மரியாதை

Also Read: காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்’; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்? – காமத்துக்கு மரியாதை – 9

காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசிக்கொண்டிருக்கிறோம். கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் [email protected] என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *