Share on Social Media

புதுடில்லி: விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஹிமா தாஸ், டுட்டீ சந்த் உள்ளிட்ட தடகள வீராங்கனைகள் இந்தியா திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23–ஆக. 8ல் நடக்கவுள்ளது. இதில், 4*400 மீ., கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்க இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றது. அதிவேக வீராங்கனை அஞ்சலி தேவி உட்பட 3 பேர் காயத்தால் அவதிப்படுவதால் பெண்கள் 4*400 மீ., ஓட்டத்தில் இந்தியா விலகியது.

டுட்டீ சந்த், ஹிமா தாஸ், தமிழகத்தின் தனலட்சுமி, அர்ச்சனா அடங்கிய பெண்கள் 4*100 மீ., ‘ரிலே’ அணி போலந்தில் (மே 1, 2) நடக்கவுள்ள தகுதிச்சுற்றில் பங்கேற்க, ஏப். 27 காலை ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) சென்றது. ஆனால் ஏப். 26 முதல் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வேறு ஏதாவது ஐரோப்பிய நாடுகள் வழியாக போலந்து செல்ல இந்திய தடகள அமைப்பு முயற்சி செய்து வருகிறது. ஆனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. ஒருவேளை சரியான நேரத்தில் போலந்து செல்ல முடியவில்லை என்றால், இந்திய வீராங்கனைகள் ஒலிம்பிக் செல்வதில் பாதிப்பு ஏற்படலாம்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *