Share on Social Media


கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், “தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் என்று யாரும் கட்சியில் இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. நாங்கள் ஜி-23 குழுவைச் சேர்ந்தவர்கள். என்ன சொன்னாலும் தலையை ஆட்டிக்கொண்டு இருக்க மாட்டோம். பிரச்னைகள் குறித்துக் கேள்வியெழுப்புவோம்” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
Twitter

கூட்டம் முடிந்த பின்னர், “ராகுல் காந்தி தலைவர் ஆகவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். அதையே அனைவரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். இனி முடிவு அவருடையது. ஜி-23 குறித்து அங்குக் குறிப்பிடவே இல்லை. அவர்களும் அந்த கூட்டத்திலிருந்தனர். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனி பேசியிருந்தார். மேலும், `சோனியா காந்தி மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமை யாரும் சந்தேகப்படவில்லை’ காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி தொடர் சரிவினை சந்தித்துவரும் சூழல், இன்று அந்த கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *