Share on Social Media


கி.பி 1620-ல், டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடியில்  இந்தியாவில் தங்களது வர்த்தக மையத்தை அமைக்க முடிவு செய்தவுடன், அப்போது தஞ்சையை ஆண்ட விஜய ரகுநாத நாயக்கரிடம், தரங்கம்பாடியில் ஒரு துறைமுகத்தையும், டேனிஷ் கலைநுணுக்கத்துடன் ஒரு பாதுகாப்பு கோட்டையையும் அமைக்க அனுமதி பெற்றனர். இரண்டே ஆண்டு காலத்திற்குள், கி.பி 1622-ல்  கட்டி முடிக்கப்பட்ட அந்தப் பிரமாண்ட கோட்டை, இந்தியாவில் டேனிஷ் வர்த்தக மையத்தின் தலைமை பீடமாக அமைந்தது. 

இந்தக் கோட்டையில் இரண்டு தளங்களில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. மேல் தளத்தில், கவர்னர்கள், ராணுவ தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அறைகளும், கீழ்தளத்தில், பண்டகசாலை, சிறைச்சாலை, சமையலறை, ராணுவ வீரர்களுக்கான அறைகள் ஆகியவையும்  அமைந்துள்ளன. கோட்டையின் உட்புறத்தில் புல்வெளி தளம், முதல் தளத்தை பார்வையாளர்கள் சுற்றி பார்க்க நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 

இந்திய அரசின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன், அவர்களுடன் இணைந்து இந்தக் கோட்டை பாதுகாப்புப் பணியில் டென்மார்க் நாட்டவரும் பங்கேற்றனர்.

டேனிஷ்கோட்டை

டேனிஷ்கோட்டை

இந்தக் கோட்டையில் தற்போது தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. டேனிஷ்காலப் பொருள்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள்  உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அருங்காட்சியகமும், டேனிஷ் கோட்டையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில்தான் கடல் அரிப்பு டேனிஷ் கோட்டையை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இது குறித்து, டென்மார்க் நாட்டில் இயங்கி வரும் ‘டேனிஷ் – டிராங்குபார் அசோசியேஷன்’ என்ற அமைப்பின் தலைவர் பவுல் பீட்டர்சன், “இதனைப் பாதுக்காக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கடலிடம் கோட்டையை  இழந்துவிடும் நிலைக்கூட வரலாம். ஆகவே காலம் தாழ்த்தாது அதிக உயரம் மற்றும் அகலம் கொண்ட கருங்கல்லலான தடுப்புச் சுவரை உடனடியாக அமைக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *