Share on Social Media


சென்னை: தயவு செய்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று நடிகர் சத்தியராஜ் வலியுறுத்தியுள்ளார். நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: சமீப காலமாக சில வேதனையான விஷயங்களை நான் கேள்வி படுகிறேன். யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு நமக்கு நாமே மருத்துவராகிவிடுகிறோம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவரும் மருத்துவர்கள் தான். இது சாத்தியமா? மருத்துவம் படித்தவர்கள் மட்டும் தான் மருத்துவராக இருக்க முடியும். எனவே தடுப்பூசி குறித்து ஏதேனும் குழப்பம் இருந்தால் உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் உங்களை சரியாக வழிநடத்துவார்கள்.

ரத்தக்கொதிப்பு உள்ளது, சர்க்கரை நோய் உள்ளது என்றால் மருத்துவர்கள் அதற்கான தீர்வினை வழங்குவார்கள். அதனால் தயவு செய்து நம்மூரில் காலரை தூக்கி விட்டுக்குற விஷயம் இருக்கிறது. நம்ம body லாம் steel body ங்க ஒன்னும் வராது. இது சத்தியத்துக்கு கட்டுப்பட்ட உடம்பு. இப்டிலாம் வேண்டாம். இருந்துட்டு போகட்டும். நீங்க steel body யாவே இருங்க. சத்தியத்துக்கு கட்டுப்பட்ட உடம்பாவே இருங்க. நம்மள விட மருத்துவர்களுக்கு மருத்துவ துறையில் நிச்சயமாக விவரம் தெரியும். அதற்காக தானே அவர்கள் மருத்துவம் படித்துள்ளனர். தயவு செய்து மருத்துவர்களை அணுகுங்கள். நான் சொல்வதை கூட கேட்க வேண்டாம். நான் என்ன மருத்துவரா என்ன? நான் சமீபத்தில் கேள்விப்பட்ட செய்தி மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். செய்கின்றனர். ஆனால் தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவு செய்து மருத்துவர்களை அணுகி தெளிவுபடுத்திகொண்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். மருத்துவர்கள் அறிவுரைப்படி. சத்தியராஜ் அறிவுரைப்படி அல்ல. நன்றி வணக்கம் என்று தெரிவித்து நடிகர் சத்தியராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *