Share on Social Media


`என்ன பண்றது… அனுசரிச்சுத்தான் போகணும். உன் புருஷன் சம்பாதிக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ’ என்கிறார் மாமியார்.

`நானும் வேலை தேடிட்டுத்தான் இருக்கேன், எதுவும் கிடைக்கல. தொழில் ஆரம்பிக்க கையில பணமும் இல்ல. பொறுத்துத்தான், சகிச்சுத்தான் ஆகணும், வேற வழியில்ல’ என்கிறார் கணவர்.

ஆனால், உண்மையில் அதற்கான முழுமையான முயற்சியை அவர் கொடுப்பதில்லை என்பதே உண்மை. `வீட்டு வாடகை இல்ல, சோத்துக்குப் பிரச்னையில்ல, தங்கிக்க தனி ரூம் இருக்கு. இருக்குற வரைக்கும் இப்படியே இருப்போம்’ என்பது போல பொறுப்பற்று நடந்துகொள்கிறார். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், சண்டை போட்டும் பலனில்லை.

Couple (Representional image)

Couple (Representional image)
Pixabay

அவர் தம்பி, அவர் அம்மா என்பதால் அவருக்கு இங்கு நிகழும் அவமானங்கள் உரைக்காமல் இருக்கலாம். அல்லது, இவர்கள் அவரிடம் ஒரு மாதிரியும் என்னிடம் ஒரு மாதிரியும் நடந்துகொள்ளலாம். ஆனால் நாளாக ஆக இங்கு தங்குவது எனக்கு நரகத்தில் இருப்பதுபோல உள்ளது. என் பிறந்த வீட்டில் உதவி கேட்கும் அளவுக்கு அவர்களுக்கும் வசதியில்லை. நான் வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்தாலும் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அதற்கு வழியில்லை.

தம்பியின் சம்பாத்தியத்தில் என் கணவர் தஞ்சமடைந்து கிடக்கும் இந்தச் சூழலில், என் சுயமரியாதையை பறிகொடுத்துள்ளேன். வாழ்வை நிமிர்த்த வழி என்ன?



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *