Share on Social Media


மதுரையி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண இன்று மதுரை வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திரும்பிச் செல்லும்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

“தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக முதன்முறையாக தமிழகத்துக்கு வந்துள்ளேன். தமிழ் கலாசாரத்துக்கும், தமிழக மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விளையாட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காளைகள் விளையாடுவதைப் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருந்தது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *