Share on Social Media


தஞ்சாவூர் அருகே வல்லத்திலிருக்கும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமையில் 29-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டதுடன் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். முன்னதாக பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கும் ஒன்று.

அமைச்சர் பொன்முடி,
கி.வீரமணி

அமைச்சர் பொன்முடி,
கி.வீரமணி

தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்விவரை, மாணவர்களுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்ற அடிப்படையில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டிலேயே தமிழகத்தில் 51 சதவிகித அளவுக்கு உயர்கல்வி வளர்ந்திருக்கிறது. ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு காமராஜ் அடித்தளம் என்றால்,உயர்கல்வி வளர்ச்சிக்கு கருணாநிதிதான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *