Share on Social Media


கடந்த ஆட்சியில் தாரளாமாக தடுப்பூசி கிடைத்தபோதும் 63 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் நாலரை மாதங்களில் 5 கோடியே 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்காக தமிழகத்தில் 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 66 முதல் 67 சதவிகிதம் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 64 சதவிகிதம் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள 331 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து டெங்கு முன்னெச்சரிக்கை பணிகளான அபேட் மருந்து தெளித்தல், புகை மருந்து உள்ளிட்ட பல்வேறு தடுப்புப் பணிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து செய்து வருகிறது” என்றார்.

இந்த நிகழ்வின் பொது தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பழனி எம்எல்ஏ ஐ.செந்தில்குமார், திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *